நினைவு குடை

பாதையில் உன் ஞாபக
போதையில் தல்லாடி
வந்த வேளையில்
துள்ளி ஓடியேதே
என் துளி கண்ணீர்


பள்ளி போகையில்
துள்ளி துள்ளிய
ஓடிய கால்கள்
இன்று உன் தோடி
தடுமாறுகின்றதே

மனம் எங்கும் உன்
நினைவு ஓராட்ட விழியால் மழை வெள்ளம்
போகும் நிலை என்ன

போகும் பாதை எல்லாம்
உன் ஞாபகம் வெள்ளமாய்
உருவடுத்து இருக்கின்றது
என் மனம் அதை
உணர்த்துகின்றது

எங்கு பார்த்தாலும்
காதல் மழை
எனக்கு ஏன் இந்த காணல் மழை

கருமேகமாய் என்னை
மாற்றி
விறகு போல் உடைத்து
எரியும் குணம்
எங்கு இருந்து
வந்தது உனக்கு


உலகமும் பேசிய காதல்
உள்ளம் எங்கு ஊசிபோட வைத்தது என்ன

ஒற்றை குடை ஒன்று
இருப்பின் மாற்றிக்
கொள்ள நீயும் இல்லை
என் உயிரும் எனக்கு
சொந்தம் இல்லை

மறந்து போகிறேன்
துளைந்து போக என்
உணர்வை விட்டு
உன்னிடம்

கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பொத்துவில் -

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (28-Dec-15, 7:26 am)
Tanglish : ninaivu kudai
பார்வை : 149

மேலே