என்று மாறுமோ

உன்னிதழ்கள் என்ன ரோஜாவா? - அதைத்
தேடியே வண்டுகள் சுற்றுகிறதே

உன் கண்கள் என்ன மீன்களா? - அவை
இமைக்காமல் என்னை துளைக்கின்றதே

உன்கூந்தல் என்ன மயிலிறகா? - தென்றல்
காற்றினில் அழகாய் அசைகிறதே

உன்பற்கள் என்ன முத்துக்களா? - சிறு
சிரிப்பினில் என்னை மயக்கின்றதே

உன்பார்வை என்ன காந்தங்களா? - ஒரு
இரும்பாய் என்னை ஈர்க்கின்றதே

நீசிரித்தாய் மெல்லிசை அறிந்தேன்
நீபார்த்தாய் என்திசை மறந்தேன்
நீநடந்தாய் உன்விசை தொடர்ந்தேன்
நீபிரிந்தாய் இதயத்தசை இழந்தேன்

உன்னைச் சேருவதன்றோ என்வாழ்நாள் ஆசை
என்னிதயத் துடிப்பில் உன்பெயரின் ஓசை
உன்பிரிவின் வழியால் என்மனதில் பாசை
என்சென்றாய் நம்பி அவனற்பக் காசை.

இலையில்லா மரம்போலே வாடுதேஎன் மனம்
அலையில்லா கடல்போலே நானசைவின்றி தினம்
தீயில்லாப் புகையைப்போல் என்ரோஜாவின் மனம்
நீயில்லாக் காரணத்தால் என்னுள்ளத்தில் ரணம்

யுகம்யுகமாய் நீள்கிறதே
நீயில்லா நொடியும் கணமும்
துகள்துகளாய் சிதறியதேமனம்
காரணம் பதவியும் பணமும்
நகம்சதையாய் பிரியமுடியாமல் மடிகிறேன்
என்று மாறுமோ உன் மனமும் குணமும்?

எழுதியவர் : சுரேஷ்குமார் (28-Dec-15, 7:36 am)
Tanglish : enru maarumo
பார்வை : 297

மேலே