பகுத்தறிவு
பகுத்தறிவு வேணுமுன்னு சொன்னாங்க
பகுத்தாயாம தெரியாம நின்னோங்கோ
எதிர்ப்பு துவேஷமா எடுத்தோமுங்க
பகுத்தாயாம எதிர்த்து நின்னோங்கோ
பகுத்தறிவு வேணுமுன்னு சொன்னாங்க
பகுத்தாயாம தெரியாம நின்னோங்கோ
எடுப்பார் கைப்பிள்ளை ஆகாதீங்காங்க
அர்த்தம்தான் தெரியாம நின்னோங்கோ
எடுத்து எறிந்துதான் பேசுனோங்க
இப்பவும் கைப்பிள்ளையா நின்னோங்கோ
பகுத்தறிவு வேணுமுன்னு சொன்னாங்க
பகுத்தாயாம தெரியாம நின்னோங்கோ
மூடநம்பிக்கை பக்கம் நிக்காதேனுங்க
நம்பிக்கை கொள்ளாம வந்தோம்ங்க
அர்த்தத்தை எல்லாம் கொன்னேங்கோ
நம்பாமல் எதிர்த்து நின்னோங்கோ
பகுத்தறிவு வேணுமுன்னு சொன்னாங்க
பகுத்தாயாம தெரியாம நின்னோங்கோ
எல்லோரும் இந்நாட்டுமன்னருன்னு சொன்னாங்க
அர்த்தம்தான் தெரியாம நின்னோங்கோ
அடிபணிவை அறவே விட்டேனுங்க
அடிபணிய ஆளில்லா அரசரானேனுங்க
பகுத்தறிவு வேணுமுன்னு சொன்னாங்க
பகுத்தாயாம தெரியாம நின்னோங்கோ
- செல்வா

