கடவுளை காணோம்

ஓர் ஊரில் இரண்டு குறும்புக்கார சிறுவர்கள் இருந்தார்கள்..
ஊரில் ஏதாவது காணாமல் போனால்.. முதல் விசாரணை இவர்களுக்குத்தான் நடக்கும்.அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோரும் இவர்களை திருத்த அவரின் உதவியை நாடினார்கள்
அவரும் இரண்டு சிறுவர்களில் ஒருவனை அழைத்தார்.
துறவி _மகனே நான் ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல். கடவுள் எங்கே இருக்கின்றார்?? கடவுள் எங்கே?
(சிறுவன் பதில் சொல்லாமல் ஓட்டமாய் ஓடி வீடு வந்துசேர்ந்தான்)
மற்ற சிறுவன் இவன் வந்ததற்கான காரணத்தை விசாரித்த பொழுது இவன்.. "நாம் இப்போது பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளை காணோமாம். அந்த ஆள் கடவுள் எங்கே எங்கே என்று என்று என் கிட்ட கேட்கிறான்.. ஊரில் ஏற்கனவே என்ன காணாம போனாலும் நம் மீது தான் பழி போடுகிறார்கள்.அனேகமாக இந்த பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிக்கின்றது என்றான்.


படித்ததில் சிரித்தது

எழுதியவர் : (30-Dec-15, 7:20 pm)
சேர்த்தது : செ நிரஞ்சலா
Tanglish : katavulai kaanom
பார்வை : 154

மேலே