விண்ணில் தூங்கும் முகில் நீ

உன்னைத் தேடி வரும் எந்தன் ஜீவன்தனை
காயம் செய்து நீ என் கையில் தருவாயா?

இன்னல் யாவும் உன் கண்ணில் சேர்ந்து
எனைக் கொல்லும் போது நீ
என் துன்பம் அறிவாயா?

விண்ணில் தூங்கும் முகில் நீ!
இவன் கண்கள் வேண்டும் நிழல் நீ!

வானெங்கும் உனக்காக
விண்மீன்கள் வியாபாரம் செய்வேனே!

வைரங்கள் பயிர் செய்து
நாம் வாழ புது உலகம் நெய்வேனே!

உனதருகே தடுமாறிப் போகின்றேன்!
உணர்விழந்து சிலையாகிப் போகின்றேன்! அன்பே!

எழுதியவர் : பெருமாள் (31-Dec-15, 7:02 am)
பார்வை : 109

மேலே