பிசிலி

அடியே பிசிலி எங்கடி போயிட்ட. சீக்கிரம் வாடி. முதுகுல எறும்பு கடிக்குது.எங் கைக்கு எட்டுல. அதச் சீக்கிரம் பிடிச்சுத் தூக்கிப் போடுடி. வலிக்குது.

என்ன பாட்டி என்னக் கூப்பிட்டீங்களா? ஆமாண்டி பிசிலி.முதுகுல எறும்பு கடிக்குது.

இதோ அதத் தட்டிவிட்டுட்டேன் பாட்டி. என்ன என்னன்னு கூப்ப்பிட்டீங்க?

பிசிலி -ன்னு உம் பேரச் சொல்லித் தாம் கூப்பிட்டென்.

பாட்டி எம் பேரு பிசிலி இல்ல. எம் பேரு பிஜ்லி பாட்டி.

நா என்னாடி பண்ணட்டும் உம் பேர என்னால சரியா சொல்லமுடியலயே. தமிழ்ப் பேரா வச்சிருந்தா நான் உம் பேரா தப்பு இல்லாம கூப்பிடுவென். உங்கப்பனும் அம்மாவும் பிடிவாதமா உனக்கு பிசிலி -ன்னு பேரு வச்சிட்டாங்களே. நா என்ன செய்ய.

பாட்டி என்னோட அப்பா அம்மா அவுங்க கல்யாணதுக்கப்பறம் பாத்த மொதல் சினிமா பிஜ்லி -ங்கற இந்திப் படமாம். அந்தப் படத்திலெ கதாநாயகி பேரும் பிஜ்லியாம் . அந்தப் பேரு அவுங்களுக்குப் பிடிச்சுப் போச்சாம். நா பொறக்கறதுக்கு முன்னாடியே பொண்ணாப் பொறந்தா பிஜிலி -ன்னு பேரு வைக்கறதுன்னு முடிவு பண்ணிட்டாங்களாம்.

சரி பிசிலி -ன்னா என்ன அர்த்தம்?

பிஜ்லி -ன்னா மின்னல் -ன்னு அர்த்தம்.

அடக் கருமமே. அதுக்கு மின்னல் -ன்னே அழகான தமிழ்ப் பேரா உனக்கு வச்சிருக்கலாமே. நம்ம ஊரு தமிழ் ஆசிரியருக்கு ரண்டு பொண்ணுங்க. ஒருத்தி பேரு மின்னல். இன்னொருத்தி பேரு கன்னல்.

கன்னல். கன்னல் -ன்னா என்ன பாட்டி. நா அந்த தமிழ் ஆசிரியர் மனைவிகிட்டயே கேட்டென். கன்னல் -ங்கற தமிழ்ச் சொல்லுக்கு கரும்பு -ன்னு அர்த்தம்னு சொன்னாங்க.

=================================================================================================
-------------------------சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.

=================================================================================================
Bijli

எழுதியவர் : மலர் (1-Jan-16, 11:11 pm)
பார்வை : 96

சிறந்த நகைச்சுவைகள்

மேலே