பதிற்றுப்பத்து தமிழர்

எட்டுத்தொகை கிட்டும் பெருஞ் செல்வம்
அவற் றுறைந்த பதிற்றுப்பத்து பார்க்க
பெருமை பெறு சேரப் பதின்மர்
பெற்ற பெரும் பேறு வைத்தே.
பதின்மர் புலவர் போற்றி புகழ்ந்து
பாடல் நூறு பதிந்து வைத்தார்
கிட்டா கடை முதல் பத்து
எட் டரசர் வரலாறு வரைய.

நான்காம் பத்தில் நாம் காண
அந்தாதி தொடை ஆதிப் பாட்டு
வழக்கில் இல்ல சொல் பலவே
செறிந் திருக்க ‘இரும்புக் கடலை’
என் றெனவே இஃது வழங்க.
வென் றெழுழு மன்னர் மணிமுடி
உருக்கி பொன்மாலை செய் தணிந்தான்
கண்ணனார் பாடிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

மூன்றாம் பத்து பாலக் கௌதமர்
வேள்வி பத்து செய்ய யுதவி
பாடிப் பெற்றே செல்கெழு குட்டுவன்
நான்காம் பத்து காப்பியாற்று காப்பியர்
சேர நாட்டி னோர் பகுதி
நாற்பது நூறாயிரம் பொன் பரிசே
பாடிப் பெற்றே நார்முடிச் சேரல்
ஐந்தாம் பத்து அணி பரணர்

உம்பற்காடு வருவாய் அரசன் குட்டுவசேரல்
பாடிப் பெற்றே கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
ஆறாம் பத்து காக்கைப்பாடினியார் நற்சொள்ளையார்
ஒன்பது துலாம் பொன் மற்று
பொற்காசு நூ றாயிரம் பரிசு
பாடிப் பெற்றே ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
ஏழாம் பத்துக் குறிஞ்சிக் கபிலர்
நூறாயிரம் பொன் கண்ணுக் கெட்டிய

தொலை நிலப் பகுதி பரிசு
பாடிப் பெற்றே செல்வக்கடுங்கோ வாழியாதன்.
எட்டாம் பத்து அரிசில் கிழார்
ஒன்பது நூறாயிரம் மற்று அரசுக்கட்டில்
பாடிப் பெற்றே பெருஞ்சேரல் இரும்பொறை
ஒன்பதாம் பத்து பெருங்குன்றூர் கிழார்
முப்பத்திரண் டாயிரம் பொன் மற்று
பிற அருங்கலங்கள் பன் னூறாயிரம்.

பத்தாம் பத்து கிட்டா அரசன்
யானைகட்சேய் மாந்தாரல் சேரல் இரும்பொறை.
முதல் பத்து இப்போ கிட்டா
பேர ரச உதியஞ்ச சேரலாதன்
ஒவ்வொரு பாட் டிறுதி பெறுமே
துறை வண்ணம் தூக்கு(இசை) இவை
இசையொத்து பாடப்பெற்ற நூ லிதுவே
சிறு பெரு அரசு வென்றே

கைம்மைப் பெண்ணின் கார்கூந்தல் களைந்து
அம்மயிராய் கயிறாய் திரித்து களிறு
பூட்டி பகைவ காவல் மரமிழுத்தான்
கடல் பிறக்கோட்டிய சேர செங்குட்டுவன்.
பத்தின் கடைப் பதிகம் அமைத்தே
நூலின் முழுத் திணை பாடாண்
தொகுத்தார் தொகுப்பித்தார் அறிய இயலா
இக்கொடை நமக் கீன்றார் உ.வே.சா.

எழுதியவர் : செல்வா.மு(தமிழ் குமரன்) (3-Jan-16, 3:45 pm)
பார்வை : 139

மேலே