மனிதம் ENGE

மனிதம் எங்கே

21ம் நூற்றாண்டின்
அதி பெறுமதி வாய்ந்த சொத்து
மனித நேயம்

ஏழைகளின் வாழ்வில்
விடிவை எண்ணி எண்ணியே
எனது இரவுகள் தூக்கமின்றி
விடிந்து விட்டன

இதயமே இல்லாத
மனிதர்களின்
சுவனபுரியாகிவிட்டது உலகம்

எனக்கும் இதயமே
இல்லாமல் இருந்தால்
இங்கு நடக்கும் அநியாயங்கள் பார்த்து
நானும் அழுதிருக்க மாட்டேன் ...

அண்மைய வெள்ளத் தண்ணீரின்
பெரும் பகுதியே
சிரியாவிலும் பாலஸ்தீனிலும் சிந்தப்பட்ட
கண்ணீர்தான்

உலகில் மனித நேயம் பேச
புத்தரோ முஹம்மதோ
இனி வரப் போவதில்லை .

இனி உலக முடிவு வரை
உலகின்
அதி பெறுமதி வாய்ந்த சொத்து
மனித நேயம்.....


--மதனி உவைஸ் ...
அவிசாவளை

எழுதியவர் : (5-Jan-16, 12:39 pm)
பார்வை : 59

மேலே