மடியினில் மழைக்காலம்

ஈராறு வருடத்தில்,
தொடங்கிடுமே இம்மழை...!
மழைக்காலம் தொடங்கியதால்,
வாசலிலே செம்மழை....!

இயல்பு வாழ்க்கையை,
கெடுக்கும் மழை....!
இன்னல்கள் பல,
கொடுக்கும் மழை....!

ஆண்களுக்கு ஆகாது,
இந்த மழை....!
பெண்களுக்கே சாபமாய்,
வந்த மழை....!

மாதம் தவறாமல்,
துரத்தும் மழை....!
மகளிர் உடலை,
வருத்தும் மழை....!

மெல்ல மெல்ல,
உதிரும் மழை....!
மேனியை வாட்டும்,
உதிர மழை....!

கறைக் கறையாய்,
படியும் மழை....!
படிப் படியாய்,
குறையும் மழை....!

பெண்ணுள் பெய்யும்,
கொடிய மழை....!
மூன்றே நாளில்,
முடியும் மழை....!

கடவுள் தந்த,
பருவ மழை....!
கழிவாய் பொழியும்,
திரவ மழை....!

கடை சென்று குடை வாங்கி,
வருவாள் என் அன்னை....!
மழைக்காலம் முடிந்தால் தான்,
விடுவாளோ என்னை....!

பெய்யெனப் பெய்திடும்,
மழைக்காலம்....!
தீட்டென ஒதுக்கிடும்,
பிழைக் காலம்.....


குறிப்பு : பெண்மைக்கு சமர்ப்பணம்

எழுதியவர் : அகத்தியா (5-Jan-16, 11:27 pm)
பார்வை : 85

மேலே