உம் பையன் சுந்தர் -ன்னா எம் பையன் அந்தர் -டா

உம் பையன் சுந்தர் -ன்னா எம் பையன் அந்தர் -டா
--------------------------------------------------------------------------

டேய் வேலு நீ பங்காளி பகையாளிங்கறத நிரூபிச்சிட்டடா. இனிமே நீ என்ன பண்ணினாலும் அதுக்கு ஏட்டிக்குப் போட்டியா செய்யறதுதாண்டா என்னோட வேலை.

ஏண்டா பங்காளி பழனியப்பா, எனக்கு எதிரா என்னடா செய்வ?

இதோ இப்பவே செய்யறண்டா. உம் பையனுக்கு நீ சுந்தர் -ன்னு பேரு வச்சிருக்க இல்லையா? எம் பையன் உம் பையனைவிட ஒரு வாரம் எளையவண்டா. இன்னும் அவனுக்கு நான் பேரு வைக்கல. உனக்கு மட்டும் தா உம் பையனுக்கு சுந்தர் -ன்னு இந்திப் பேரு வைக்கத் தெரியுமா? எம் பையனுக்கு இன்னும் பேரு வைக்கல. இதோ இப்பவே அவனுக்குப் பேரு வைக்கறண்டா.

வச்சுக்கடா பங்காளி பழனி.

டேய் வேலுப் பங்காளி உம் பையன் சுந்தர் -ன்னா. எம் பையன் அந்தர் -டா. அந்தப் பேருக்கு அர்த்தம் இருக்குதோ இல்லையோ எனக்கு அதப் பத்திக் கவலை இல்லைடா.

----------------சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயர் அறிய----------------------------
இந்தியில் சுந்தர் என்றால் அழகானவன் என்று பொருள்.
அந்தர் என்பதற்கு என்ன பொருள் என்று தெரியவில்லை. உருது, இந்தி தெரிந்தவர்கள் யாராவது அந்தச் சொல்லின் பொருள் தெரிந்தால் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எழுதியவர் : மலர் (6-Jan-16, 4:39 pm)
பார்வை : 192

மேலே