காலத்தை வென்ற கவிக்கோ

உன் கவிதைகள்
காலத்தை வென்றவை
அலெக்ஸ்சாண்டரைப்போல் இந்த
ஞாலத்தை வென்றவை

உன் கவிதைகள்
மாம்பலத்தில் பாலத்தைப் போன்றவை
மாம்பழத்தில் சேலத்தைப் போன்றவை
மார்கழியில் கோலத்தைப் போன்றவை
கலைத்தாயின்
மார்பில் சேலையைப் போன்றவை

தமிழ் மகள் வந்து விளையாடும்
சோலையைப் போன்றவை
அறியாமை இருள்தனை
அறிவாளின்றி அறிவால் விலக்கும்
காலையைப் போன்றவை

உன் காதல் கவிதைகள்
மேனகையின் மேனியிலிருந்து
தவறி விழுந்த மேல் நகைகள்

உன் கசல் கவிதைகள்
ஐஸ்வர்யாராயின் தலையிலிருந்து
உதிர்ந்த மந்தாரப்பூக்கள் அல்ல
கலைத்தாயின் தலையிலிருந்து
உதிர்ந்த மந்திரப்பூக்கள்

அவை கவிதைகள் அல்ல
போதி மரத்தின் விதைகள்
நாங்கள் ரசித்து ருசிக்கும்
கவிப்பழத்தின் சதைகள்

கலைவாணி
ஞானசம்பந்தர் அழுதார்
நாவிற்குப் பால் கொடுத்தாள்
தலைவாநீ
அழவில்லை அதனால்
உன் நாவிற்கு பா கொடுத்துவிட்டால்

நீ அழுத ஞானசம்பந்தர் இல்லை
ஆனால் அதீத ஞானத்தோடு
சம்பந்தம் கொண்டவன்

பொருள் வைத்தால்
பாடுவோர் மத்தியில் நீ
பொருள் வைத்து படுபவன்

கவிக்கோ அப்துல் ரகுமானே
நீ நபிகள் புவிக்குத்தந்த கவிமானே
திரைப்பாடல் இயற்ற மறுத்த கவரிமானே
நீ வால்மீகி படைக்காத
ராமாயணத்தின் ஏடு
ரகு மான் இல்லாமல் ராமாயணம் ஏது ?

கவிக்கோ
நீ இரண்டே அடியில்
சிலப்பதிகாரம் சொன்ன
இளங்கோ
உன் கவிதைகளோ
கவி சாம்ராஜ்ஜியத்தின்
இளம் கோ

புதனுக்கு பொற்பதமாய்
சொற்பதம் கண்ட
அற்புதன் நீ

வியாழனுக்கு வித்தியாசமாய்
சொல் கண்ட
கல்வியாழங் கண்டவன் நீ

நீ கண்ட போதிமரம்
ஆயுதப் பூவல்லவா பூக்கின்றது
உன் காகிதத்தில்

புதுவைக்கு வந்த புது வைரமே
உனைப் பாடுவது நான் பெற்ற வரமே
உனைப்போற்றித் தாழ்கிறது
என் சிரமே

அன்புடன் கவிஞர் இரா . குமார்

எழுதியவர் : குமார் (8-Jan-16, 11:01 pm)
பார்வை : 215

மேலே