கடைசி மரம்
கடைசி மரம்
....................................
போதிமரங்கள்
துறவு கொள்கின்றன..
உதிரும் இலைகளில்
ஏமாற்றங்கள் எழுதின
இனி
எந்த சித்தார்த்தனும்
வரப்போவதில்லை என்று..
.......
ஆசைகளின் கோடரிகளை
கிரீடங்களாக்கி கொண்ட
யுகத்தில்
சவப்பெட்டிகளாகவே தன்னை
செதுக்க துவங்குகின்றன மரங்கள்.
......
வாசிக்கப் படாத
அனுபவப்பாடம்
வறட்சியில் மடிந்த
சிந்துச் சமவெளி...
...
மரபின் பிழை
மரத்தின் கொலை..
......
இனி
அறையப்படபோவதில்லை
சிலுவையில் ஏசு
பாவிகளின்
கோடரி முனையில்-தன்
இறுதிக்் குருதியை
சிந்திச்சாயும்
கடைசி..மரம்.. ..
நல்லவேளை..
கண்ணணில்லை...
எந்த மரத்திலிருந்து
தன்
புல்லாங்குழலை த் தேடுவான்???
கடைசிமரம்.