விடைக்கு ஆறுதல்

விடைக்கு ஆறுதல் ?

பிறப்பு இறப்பிற்கு ஆறுதலாகும்
இறப்பிற்கு விடை என்னவாகும்

தவிப்பிற்கு கூடல் ஆறுதலாகும்
தவிப்பிற்கு விடை என்னவாகும்

பரீட்சைக்கு விடை ஆறுதலாகும்
படிப்புக்கு விடை என்னவாகும்

பஞ்சத்திற்கு பிச்சை ஆறுதலாகும்
பஞ்சத்திற்கு விடை என்னவாகும்

பசிக்கு உணவு ஆறுதலாகும்
உணவுக்கு விடை என்னவாகும்

தாகத்திற்கு தண்ணீர் ஆறுதலாகும்
தாகத்திற்கு விடை என்னவாகும்

இருப்பதற்கு இல்லாமை ஆறுதலாகும்
இல்லாததற்கு விடை என்னவாகும்

இரும்புக்கு அடிப்பது வலுகூட்டும்
அடிப்பதினால் இரும்பு என பெயர் நிலைநாட்டும்

இயற்பியலில் இந்த முறைக்கு
செறிவூட்டல் என பெயர்
இயற்கையில் இந்த நிலையில் வாழ்வது சிலர்

அழுகைக்கு புன்னகை ஆறுதலாகும்
புன்னகைக்கு மட்டும் பெயர் வேறு ஆகும்

குழப்பத்திற்கு அமைதி ஆறுதலாகும்
குழப்பத்திற்கு விடை என்னவாகும்

யுத்தத்திற்கு ஆறுதல் என்னவாகும்
ஆறுதலுக்கு யுத்தமா விடையாகும்

நடிப்பு வாழ்வதற்கு ஆறுதலாகும்
வாழ்கையின் விடை என்னவாகும்

ஆண்களுக்கு பெண்களா ஆறுதலாகும்
பெண்களுக்கு ஆண்களா ஆறுதலாகும்

கல்யாணத்திற்கு இது காரணமாகும்
காரணத்திற்கு ஆறுதல் உண்டாகும்

ஆறுதலுக்கு இயற்கை இனப்பெருக்கம்
என்று பெயர் சூட்டும்

அந்த பெருக்கம் நம் தேசத்திற்கு
ஆறுதலாகும்

மனித இனமே

விட்டுக்கொடுப்பது விடையாகாது
தட்டி பறிப்பது விடையாகாது

சுய தேடல் விடைக்கு நெருக்கமாகும்
தேடுதலுக்கு பிரிவினை இல்லாக் கல்வி
பாலமாகும்

இந்த அனைத்துக்கும் முடிவு
செறிவூட்டல் ஆகும்
செறிவூட்டல் விடைக்கும் ஆறுதலாகும்
நடுவாகும்

கணக்குக்கு எண்கள் ஆறுதலாகும்
விடைக்கும் கேள்விக்கும் ஒற்றுப்போகும்

வாழ்க்கை கணக்கிற்கு
வாழ்வது விடை தேடும்

குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் ஆறுதலாகும்
உணவுக்கு
இயற்கையின் குழந்தைக்கு இயற்க்கை விடை என்னவாகும்
இயற்கைக்கு இயற்கை குழந்தையின் விடை என்னவாகும்

கிடைத்துவிட்டால் ஆறுதல் செரிவூட்டலாகும்
கிடைக்காவிட்டால் செறிவூட்டலுக்கு விடை என்னவாகும்

தோல்விக்கு வெற்றி ஆறுதலாகும்
வெற்றி எனபது நம் தீர்மானம் ஆகும்

இதனை மறக்க மறதி போதை ஆகும்

கவிதைக்கு உவமை எடுத்துக்காட்டாகும்
உவமையை கவிதை எடுத்து காட்டும்

நேரத்திற்கு இந்த கவிதை ஆறுதலாகும்
ஆறுதலுக்கு இந்த கவிதை விடையா ?

உங்கள் பாராட்டிற்கு என் மனம் ஆறுதலாகும்
உங்கள் கருத்திற்கு என் கபாலம் இறங்கி விடை தேடும்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (10-Jan-16, 2:57 am)
பார்வை : 152

மேலே