சுடுவதில் உலகத்திறமை

இரு இந்தியத் தலைவர்கள் லண்டனுக்கு ஒரு விருந்துக்கு சென்றார்கள். முதலாமவர் விருந்தில் பரிமாறப்பட்ட வெள்ளி ஸ்பூன்கள் 3 ஐ விலையில்லா பொருளாகக் கருதி சுட்டுவிட்டார். பின்னவருக்கோ சரியான கடுப்பு. உடனே கூட்டத்தில் சத்தமாக இப்படி சொன்னார், லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் , இப்போ நான் ஒரு மேஜிக் செய்து காட்டப் போகின்றேன். இதோ உங்கள் கண் முன்னாடியே இங்கே இருக்கின்ற 3 வெள்ளி ஸ்பூன்களை என் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளப் போகின்றேன். ஒரு மந்திரத்தை சொல்லி அதை என் சக இந்திய நண்பரிடமிருந்து வரவழைக்கப் போகின்றேன், என்று சொல்லி அனைவரின் கண்ணெதிரே 3 ஸ்பூன்களை சுட்டு தனது ஜிப்பாவில் போட்டுக் கொண்டு , மந்திரத்தை முணு முணுத்தபடியே...முதலாமவரின் கோட் பாக்கெட்டை சோதனை செய்யச் சொன்னார். முதலாமவர் கோட் பாக்கெட்டில் இருந்து பலத்த கைதட்டல்களோடு வெள்ளி ஸ்பூன் எடுக்கப்பட்டது. பலத்த கைதட்டல்களுடன் ஜிப்பாத் தலைவர் வெற்றிகரமாக வெளியேறினார். தான் "சுட்ட" ஸ்பூன்களோடு

எழுதியவர் : செல்வமணி (10-Jan-16, 11:58 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 143

சிறந்த நகைச்சுவைகள்

மேலே