எது கொடிய நஞ்சு

காற்றில் கலந்த கார்பரேட் கார்பைடு நஞ்சில்
சிலது தொலைந்தன !

காலமே தொலைத்தோரை
பட்டியல் இடுகிறேன் கேள்!

அந்த நெடியில் உயிர் தொலைத்தோர்
கண் தொலைத்தோர்
மிதி பட்டு கால் தொலைத்தோர்
சொந்தம் மறைய விதி தொலைத்தோர்
இவர்களை நீ அறிவாய்

மதி தொலைத்தோரையும்
நீதி தொலைத்தோரையும்
நீ அறிவதற்கு முன்
காலமே புரிந்துகொள்
கார்பைடு நஞ்சை விட கார்பரேட் நஞ்சுகளே
கொடியன என்று!

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (11-Jan-16, 1:32 am)
Tanglish : ethu kodiya nanju
பார்வை : 131

மேலே