தமிழ்

மொழியினில் சுவைத்தேனை
அடக்கிவைத்து
நாவினில் நிமிடம் நிமிடம்
அள்ளித்தரும் தமிழ்மொழியை
போற்றாமல்
என் கவிதை எதைப்பாட??


மாலை நேரம் வந்தவுடன்
கவிதை பிரசவம் செய்வதற்க்கு
போராடி உயிர் பிழிந்து
தினமும் கவிதை குழந்தை பெற்ற
தாயல்லோ நான்!!

என் குழந்தையை
போற்றும்வேலையிலே
தாய் நான் ,என்னுள் தமிழ் தேசியகீதம் ஒலிப்பதினை
எவ்வாறு சொல்லிச்சொல்லி மகிழ!

இவ்வாறு சொல்ல தமிழ் விட்டால்
வேறு மொழி ஏது??

மனித இனம் தோன்றி முதல்
நான்காவாது இடத்தில்,
நம் நாட்டில் இன்னும் அழியாமல்
மூன்றாவது இடம் கொண்ட
தமிழை போற்ற ஒரு
தனிமொழி வேண்டும்!

அது தமிழுக்கே உரியதாய் வேண்டும்!

நிலம் தன்னிலிருந்து எதிர் நோக்கி
வீசுவதை தன்னிடமே இலுப்பதுபோல்
வீசிதான் பார்த்தான் தமிழை!

இதுபோல் கவிதையை இன்னும் எழுதுகிறேன்!!

இறந்தஉடல் எவ்வாறு
நிறம் மாறுமோ ,அதுபோல்
தமிழ்மொழி படித்தால்
கர்வமாய்,பெருமையாய் என்
குணம் மாறுவது இயற்க்கையே!!!!

நிலவினை வரவேற்க
நட்சத்திரம் வருவது போல்,உன்னை
வரவேற்க என் பேனா வந்ததே!

உன்னுள் நான் தினமும்
கரைவதை நான்
பனிகட்டி மேல் கதிர் பாய்ந்தால் எவ்வாறு உருகுமோ அவ்வாறே சொல்லலாம்!!

ஆதிமொழி இதுவல்லோ!
ஆளவந்த மொழியும் இதுவல்லோ!
பாதி வழியில் வந்த மொழியை
அடக்கி வைத்த மொழியும்
இதுவல்லோ!
சிதறிப்போன ஆதி மொழியில்
இன்னும் சிதறா மொழியும்
இதுவல்லோ!!!!

எழுதியவர் : (12-Jan-16, 6:26 pm)
Tanglish : thamizh
பார்வை : 200

மேலே