யானைக்கு எதிரி

யானைக்கு எதிரி!

யானையின் கால்நகத்தில்
கால்பாகமுமில்லாத
கட்டெறும்போ
யானைக்கு எதிரி!

நறுக்கென்று நாசுக்காய்
கொத்தும் நாகத்திற்கோ
கீரிப்பிள்ளை
நாகத்துக்கு எதிரி!

காக்கைக் கூட்டினில்
தன்குஞ்சைப்
பொரிக்க வைக்கும்
குயில்களுக்கோ
காக்கைகள் எதிரி

மின்னும் கண்களால்
பூனைகளுக்கு
நாய்கள் தான்
பூனைக்கு எதிரி!

நல்வாழ்வு நாம்வாழ
உழைக்காத
சோம்பல்தான்
நமக்கு எதிரி!

தைத்திங்களில்
தயாராகுங்கள்
உழைத்திடுங்கள்!
உயர்ந்திடுங்கள்!

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (12-Jan-16, 8:35 pm)
பார்வை : 141

மேலே