உன் போல் நானும் பாலுட்டி தான்

கடல் ஆழம் இருந்து வருகிறேன் பிணமாக
ஏன் வந்தேன் என கேட்பாய் ??
என்ன தைரியம் உனக்கு ??
என் உயிர் குடித்ததே நீ தானே !

இருந்தும் சொல்கிறேன் கேள்
உன் உயிர் காக்க என் சொல் உதவலாம் !

உன் போல் நானும் பாலுட்டி தான்
கடல் சூடு ஏறவே
கரை தேடி சுவாசிக்க வந்தேன்

கடல் நீரில் கதிர் வீச்சு
இருப்பது தெரியவில்லை
பல வருடம் வாழ்ந்த என் முன்னோர்
கரை ஒதுங்கி செத்ததில்லை

நல்ல வேளை ஊனமாகி
உயிர் வாழும் சாபம் எங்களுக்கில்லை

மனிதா என் சாவை குறித்து கொள்
நாளை நீயும் இரையாகலாம்
ஊனமாய் திரியும் சாபம் உனக்கு உண்டு
சற்றே கவனமாய் நடந்து கொள் !

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (13-Jan-16, 7:25 pm)
பார்வை : 69

மேலே