பொங்கிடும் சந்தோஷம்

தை பிறந்தால்
வழி பிறக்கும்.....
உழுதுண்டு உயிர்
வாழ உழைத்தவர்
வலி மறக்கும்
நன்றியின் இந்தநாள்
சொல்ல என்னுள்
கவி(தை)
பிறந்தது.....!!

பொங்கிடும்
வேளையில்
தங்கிடும்
சந்தோஷங்கள்
நீங்காமல் என்றும்
நீடூழி வாழ
வேண்டும்....!!

கோபங்கள்
குரோதங்கள்
உனக்குள்ளே
வேண்டாம்.....
வசதியாய்
இல்லை வாழ்க்கை
என்று
வருத்தங்கள்
உனக்கு வேண்டாம்......
யாரையும்
வருத்தாமல்
வாழும்
காலங்கள்
கரைந்தாலே
போதும்......!!

இந்த நாளே
பொன் நாளென
ஒவ்வோர்
நாளும்.....நெஞ்சில்
நினை.....
நிம்மதி கொள்ளும்
உன் மனம்.....!!
வினை
என்றும்
சதி என்றும்
கடந்த
பாதி வாழ்க்கையை
எண்ணிக்கொண்டே.....
மீதி
வாழ்க்கையை
பீதி கொண்டு
வாழாதே.....வீதி
உனது..... விரும்பியபடி
பயணித்துக்கொள்ளு....!!

வானம்
வசப்படும்
என்று கனவு
காணாதே......கரங்களை
நீட்டிப்பார்
விண்ணதை தொட்டு
நிற்பாய்.....வெற்றி
உனதே.....!!!!


எழுத்தின் தள
நிர்வாகத்தினர்
மற்றும் தோழர்
தோழிகள் அனைவர்க்கும்
இனிய தைப் பொங்கல்
வாழ்த்துக்கள்.......!!


என்றும்
நட்புடன்

Thampu

எழுதியவர் : thampu (15-Jan-16, 4:17 am)
பார்வை : 178

மேலே