கண்ணீரும் ஆனந்தமே

சோகம் என்னை சோதித்தறிய,
சோர்ந்து போனேன் முற்றிலுமாய்,
சோலை வனமாய் உள்ள மனது,
பாலை நிலமாய் மாறியதே,
பதறி மனம் துடிக்கிறதே ,
சண்டை ஏன் ? சச்சரவு ஏன் ?
சமரசம்க் கொண்டால்,
சாதம் தொண்டை குழியில் இரங்காதோ ?
விட்டுக்கொடுப்பதும், தட்டிக்கொடுப்பதும் தானே வாழ்க்கை - இதில்
விட்டுப்பிரிவதும், தட்டித்தூக்குவதும் வந்தது எங்கே ?
வாழ மனமில்லையா ? அல்லது பிறர் வாழ மகிழ்வில்லையா ?
வாய் அதை பிறர் உயர,போற்ற,புகழ அற்றுப்போய்,
வம்புக்கும்,பிறர் வீழ்ச்சிக்கும் காரணமாவதேன் ?
அமைதியற்று அலையும் மனமே - என்று
அகத்தை புறத்தே தள்ளி வாய்க்கு வழிவிட்டாய்,
அறிவு அதை பயன்படுத்து அகத்தை காயப்படுத்த அல்ல
ஆடும் வாயினை கட்டுப்படுத்த,
வாய், இதுவே இரட்டை வழி துறவுக்கோல்,
வாழவைக்க பயன்படுத்தினால் சொர்க்க வாசலையும்,
வருத்தப்படுத்த பயன்படுத்தினால் நரக வாசலையும்,
வாழ்த்துடன் திறக்கும், " வாழ்க்கை நம் கையில் ",
கவலை, துன்பம், நமக்கு வரட்டும்
கனவிலும் பிறருக்கு வரும் வன்னம் எண்ணாதே,
கடினமாகும் மனம் மட்டுமின்றி வாழ்க்கையும்,
கனிந்த உள்ளம் கொள்,
கலக்கமில்லை கவலை இருந்தும்
காதல் உண்டு திரும்பும் இடமெங்கிலும் !!!