தமிழர் திருநாள் பொங்கல்
l
நேற்று தமிழர் திருநாளாம் பொங்கல் முதல் நாள்
போகி சுப நாள் பற்றி கவிதை ஒன்று தந்தேன்
இதோ இன்று தமிழர் திருநாளின் இரண்டாம் நாள்
வேளாண் பெருமக்கள் போற்றும் பொங்கல்
வாருங்கள் கேளுங்கள் இந்நாளில் நான் இயற்றும் பாட்டை .
ஆடி மாதம் தொடங்கி பத்து நாட்கள் கழிந்த பின்னும்
தங்கள் நெல் வளரும் நஞ்சை நிலமெல்லாம்
எழில் மங்கி சற்றே நீர் குறைய வாடி இருக்க
தென் மேற்கு பருவக் மழை வேண்டி
வேளாண் பெருமக்கள் ஆதியை மனமார வேண்டி நிற்க
அந்த நல்லுள்ளங்கள் பிரார்த்தனைக்கு செவிசாய்த்து
மாக்கடல் நீரை பெருவாரி குடித்து தன் வெப்பம் தணியdha
அங்கு அன்று முதல் மாதம் மும்மாரி பொழிந்தான்
காய்ந்த நிலம் நீர் வாங்கி எழில் பொங்க காட்சி தர
மனம் குளிர்ந்த விவசாயி நெல் விளைக்க ஏது செய்தான்
நெல் விதைத்து நாற்று வளர மீண்டும் கலை எடுத்து
சீராக நாற்று நட்டான் நெல்லும் மள மளவென்று
எழில் பொங்கும் மங்கையர் போல் வளர்ந்து நிற்க
பொன்னாடைப் போர்த்திய பாவையரைப்போல்
பொன்னாம் நெற்கதிர்கள் தாங்கி தென்றல் வீச
அங்கு அக்கதிர்கள் சதிராட
மறு நாள் அறுவடை இனிதாக முடிந்தது
தூற்றிய நெற்கதிர்கள் புது நெல் தந்தது
புது செம்பா அரிசி திரண்டு வழிந்தது
வேளாண் வீடு நெற்களஞ்சியத்தில்
மார்கழி கழிந்து தை தை என்று
நளினம் பொங்க நடனம் ஆடி வந்தாள்
தை மாத மங்கை மன்மத இந்த வருடத்தில்
குளித்தபின் புதிய ஆடை உடுத்தி
குடும்பமாய் அவரவர் இல்லத்தின் வெளியே
கூடினர் உழவர் பெருமக்கள் எல்லாம்
புது அடுப்பில் புதுப்பானையில் புது அரிசியில்
புது கரும்பு வெள்ளம் கொண்டு நறுமணம் மிக்க
ஏலம் லவங்கம் சேர்த்து பசும் நெய்க் கொண்டு
பசும் பாலில் பொங்கல் செய்தனர் அது பொங்கும் போது
எல்லாரும் விண்ணதிர பொங்கலு பொங்கல் என்று கூவி
தவறா பருவ மழை கொடுத்த அந்த சூரியனுக்கு
நெய்வேதமாக படைத்து பின்னர் அனைவரும்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்
இவ்வாறே தமிழார் திருநாள் பொங்கல் நன்னாள்
இரண்டாம் நாள் இனிதே முடிந்தது
நாளை மூன்றாம் நாள் கவிதையைப் பார்போம்