பயணப் படுகிற காதல்

கூழாங் கற்கள்
குவிந்து கிடக்கிற
காட்டு வழி
அமாவாசை அன்றிரவு
இரு விழிகளை மட்டும்
துணைக்கு அழைத்த படி
தொடர்கிற யாத்திரை


நீண்டு போன இடைவெளி
இரு உதடுகளுக்குள்
உருவான சண்டை
பகட்டுக்காய் புன்னகைக்கிறது
முட்டி மோதி
கட்டி அழுது கொண்டே

விதி என்றானதை
நொந்து கொண்ட படி
இணைந்து கிடக்கின்றன
அவர்களிற்கிடையிலான
உறவு

ஊடலின் பிறகான
கூடல் பற்றிய
வியாக்கியானம் உணர்ந்து
கொள்ளாத காதல்
பூவுக்கும் வண்டுக்கும்

சாட்டை நெளியும்
பொழுதில் ஆடை
கழன்ற தோள்கள்
விசை விழுங்கி
வலி பிரசவிக்கிறது

எழுதியவர் : (15-Jan-16, 2:51 pm)
பார்வை : 60

மேலே