கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார்

🌼கடும் சோதனைகள் வருவது ஏன் ...?

🌼

🌼சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

🌼கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும் நமக்கு நம் தலைவிதியை இறை வழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்.

🌼நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது, நமக்கு நாமே, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறல்ல.

🌼மக்களிடம் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கஷ்டங்களை அனுபவிக்கும்போது, ஏன் எனக்கு, என்பவர்கள், அவர்கள் வளர்ச்சி யடைகையில், எனக்கு ஏன் இந்த வளர்ச்சி, என்று கேட்பதேயில்லை ... !

🌼எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்பவர்கள், என்றாவது எனக்கு மட்டும் ஏன்,

🌼இந்த மாருதி கார்,
ஹீரோ ஹோண்டா பைக்,
சாம்சங் கலக்ஸி மொபைல்,
லேப் டாப்,
ஐ.டி கம்பனி வேலை,
வங்கியில் பணம் ,வீடு, நகை, வெளிநாட்டுப் பயணம், என்று கேட்டதுண்டா .. ?

🌼வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது, மின்னாது,

🌼தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது.

🌼நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள், ஆனால் வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள் அவர்களை சிறப்பிக்குமே தவிற கசப்பிக்காது.

🌼ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.அதே போல பிறந்த தேதியிலி ருந்து இறுதிவரை சந்தோஷத் துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.

🌼கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்த வர்களுக்கு, ஆண்டவன் ஒரு நாள் உதவாமற் போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று, யாரையும் ஆண்டவன் அப்படியே விட்டுவிட மட்டான்.

🌼விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் பாடங்களே போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன வலிமை வரும். சோதனைகள் என்பது மனோதி டத்தை அதிகரிக்க உதவும்

🌼சில சமயங்களில், அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை. சோதனை வேளை களில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார்.

🌼அவருடைய கண்கள் நம்மீது எப்போதும் நோக்கமாயி ருக்கின்றன.
எனவே, நற் சிந்தனையுடன், அவரது நாமமே ஜபித்து, அவரை வணங்கி, அவரிடம் சரண் அடைந்தால், நாம் நமது சோதனைகளையு ம், கர்ம வினைகளையும், பயமின்றி கடந்து சாதனையாக்கலாம்.

🌼உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம் இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சி களும் தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.

🌼கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்ளுங்கள்...

🌼நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகுங்கள்....

🌼வருங்காலத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்....

🌼கிடைக்காததையும் தவறவிட்டதையும் நினைத்துத் தளராதீர்கள்...

🌼பயத்தைக் களைந்து நம்பிக்கையை தக்க வையுங்கள்...

🌼சந்தேகங்களை நம்பாதீர்கள்
நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள்.

🌼உங்களுக்கு கிடைத்த வரங்களை எண்ணில் கொள்ளுங்கள்.

🌼கடவுளை நம்புங்கள் அவர் நல்லவர்களைக் கை விட மாட்டார்...!

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (15-Jan-16, 11:47 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 183

சிறந்த கட்டுரைகள்

மேலே