தை பொங்கல் வரலாறு- போட்டி கவிதை எண்ணம்

பொங்கல் திருநாள் உழவர்கள் வாழ்வில் மகத்தான நாள் .

கால பருவம் பார்த்து ,கழனி உழுது ,நீர் பாய்ச்சி .., பக்குவம் பார்த்து நெல்மணிகளை விதைத்து
நாள்தோறும் பராமரித்து . பாதுகாத்து நெற்கதிர் விளையச் செய்து .,,

நெல்மணிகள் தழைக்க பாடுபட்டு .., உரங்கள் இட்டு ., பூச்சிகள் அண்டாமல் இருக்க மருந்து தெளித்து
நெற்கதிர் முதிர்ந்து தலை சாய்ந்தது நிலத்தை பார்த்து ...,

நாங்கள் அறுவடைக்கு தயார் என்று தங்களது மௌனத்தால் ..,உலகின் மூல ஆதாரமான
சூரியனை நோக்கி தெரிவிக்கிறது ..,

நெற்கதிர்களை அறுவடை செய்து .., உலகின் ஒளியான சூரிய பகவானுக்கு படைக்கும்
பண்டிதர்கள் உழவர்கள் ..,

நெற்கதிர்கள் அறுவடை செய்வது தமிழகத்தில் மிகுதியாக உள்ளமையால் இதனை
''தமிழர் திருநாள் '' என்றும் உழவனின் பெருமை பாராட்டும் விதமாய் இதை ''உழவர் திருநாள் ''
என்றும் கொண்டாடுகின்றனர் . அறுவடை செய்யும் மாதம் தை திங்கள் முதல் நாள் என்பதால்
இதனை தை பொங்கல் என்றும் அழைப்பர் .

இதுவே தை பொங்கல் எனப்படுகிறது .

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (16-Jan-16, 4:11 pm)
பார்வை : 253

மேலே