என் காதலி
அவள் புல்மீது
பூத்திருக்கும் கள்
நான் அவளை
அருந்தக் காத்திருக்கும் செல்
அவள் பூவாவிற்கு பதில்
பூவை உண்பவள்
தேநீருக்கு பதில்
தேனைக் குடிப்பவள்
வெந்நீருக்கு பதில்
பன்னீரில் குளிப்பவள்
தண்ணீருக்கு பதில்
மென்நீரைக் குடிப்பவள்
அவளுக்கு காயம்பட்டால்
செந்நீர் வருவதில்லை
என் கண்ணில் கண்ணீர் மட்டுமே
வருகிறது
அவள் கூந்தல் வாசம்
உணர்த்தியது
தருமியின் பாட்டில்
பொருள்குற்றம் இல்லையென்று
அதுதான் இன்பத்தின் எல்லையென்று
நாங்கள் வண்ணப்
புல்வெளிமீது இருக்கும்
பூமாலைகள் அல்ல
கண்ணன் புல்லங்குழலிலிருந்து
வழிந்து விழுந்த காதல்
பாமாலைகள்
காதல் கொண்டிருப்பதோ
எங்கள் இரு கைகள்
இருக்கையைத் தேடிக்
காத்துக்கொண்டிருப்பதோ
இருவரின் மெய்கள்
அவள் மேனகையின்
மேனியிலிருந்து புல்வெளிமேல்
விழுந்த மேல் நகை
கண்ணகியின் பாதம்
நழுவிய கால் நகை
அவள் ஐஸ்வர்யாராயின்
தலையிருக்கும் மந்தாரப்பூ அல்ல
எனக்கு ஐஸ்வர்யமாய்க் கிடைத்த
மந்திரப்பூ
பைசா கோபுரம்
அவளைக் காணவே சாய்ந்திருக்கவேண்டும்
குற்றால அருவி
அவளைக் காணவே மண்ணில் வீழ்ந்திருக்கவேண்டும்
நயாகரா நீர்வீழ்ச்சி
அவளைக்கண்டு மலைகள்
வடித்த ஜொள்
வெள்ளையன் வெளியேறிஇருக்கமாட்டான்
இந்த வெள்ளைக்காரி
1947 இல் பிறந்திருந்தால்
பூக்களின் மகத்துவம்
இறந்தநாள் அவளின் பிறந்தநாள்