தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து5---ப்ரியா

(முன்கதைசுருக்கம்:வசந்தின் நிறுவனத்திலிருந்து வசந்தின் மூலம் நிறைய தகவல்களை சேகரித்துக்கொண்டாள் ரியா....வந்தனா சொன்ன அவனது பள்ளியறைக்கு இவளை அழைத்து செல்கிறான் சரியாக அச்சயமயம் வந்தனா ரியாவின் செல்போனுக்கு அழைப்புக்கொடுக்கிறாள்....)

வந்தனாவின் அழைப்பை துண்டித்து விட்டு வசந்தை பின் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள் ரியா....!

அங்கு வந்தனா சொன்னது போல் ஒரு தனி அறை ஒதுக்குபுறமாக அமைந்திருந்தது அதை பார்த்ததுமே பாதி உயிர் போனது ரியாவுக்கு...சரி என்னதான் நடக்கும் பார்ப்போம் இவ்ளோ மக்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் அவன் நம்மை எனன தான் செய்து விட முடியும் என்று தைரியமாக உள்ளே சென்றாள்.

பளிங்கு அறை போல் அழகாக அமைக்கப்பட்டிருந்தது 3 நாற்காலிகளும் 1 மேஜையும் மட்டுமே இருந்தது வேறு எதுவுமே இல்லை அந்த பக்கம் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு வசந்த் ரியாவை பார்த்தான் அவனது..... அந்த பார்வையில் உருகி விட்டாள்.கண்களால் 1000வோல்ட் மின்சாரத்தை வீசுகிறானே கண்களாலேயே பெண்களை கைது செய்துவிடுவான் போல......அவனது பார்வை அவளை மொத்தமாய் விழுங்குவதைப்போல் இருந்தது அவனது கண்களுக்கு அவ்வளவு பவர்.....இப்படிதான் பெண்களுக்கு கொக்கி போட்டு இழுப்பானோ????

ஏன் இந்த மனத்தடுமாற்றம் யாரிடம் இந்த மாற்றத்தை உணர்ந்தது இல்லையே என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள்....
அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் என்ன சார் சொல்லுங்க என்றாள்.

சொல்றேன் அமைதி.....என்றவன் தனது நிறுவன தொடக்கம்....... முதல் இறுதி.......,,,,,, வரை அனைத்தையும் சொல்லி முடித்தான் எதிர் நிறுவனம் செய்யும் பொருளின் தரத்தை விட நமது பொருளின் தரமும் அழகும் வித்தியாசமும் அதிகமாய் இருக்கணும் வாடிக்கையாளர்களை எளிதில் கவரும் வண்ணம் இருக்க வேண்டும் அந்த வகையில் நான் தயாரித்தவை அதிகம். இப்பொழுது செய்யப்போகும் புது மாடல் நான் 6மாதமாக இரவு பகல் என்று பார்க்காமல் கஷ்டப்பட்டு தயாரித்து வைத்திருக்கிறேன் அதன் வரைபடம்......... இதோ என்று எடுத்து காண்பித்தான்.


வாங்கி பார்த்தவளுக்கு எந்த ஐடியாவும் இல்லை... ஆனால் இதை கண்டுபிடித்தவனின் புத்தி கூர்மையை பாராட்டியே ஆகவேண்டும் அவ்வளவு அழகிய நுட்பமான வடிவமைப்பு படைப்பு....!

சூப்பர் சார் என்றாள்.

ம்.......தாங்க்ஸ் இதைதான் நாம் இனி தயாரித்து சந்தைப்படுத்தப்போகிறோம் இந்த செக்சன் இனி உன் கண்ட்ரோல் ஓகே என்று கட்டளையிட்டான்.....

இந்த ப்ராஜெக்ட்ல வின் பண்ணிட்டால் இந்தியா மட்டுமில்ல அனைத்து வெளிநாடுகளிலும் நான்தான் அதாவது நம்ம கம்பேனிக்கு தான் முதலிடம்......நல்ல வரவேற்பு இருக்கும் இன்னும் நிறைய எதிர்பார்ப்பார்கள் என்று சந்தோஷமாய் சொன்னான்.

ஓகே சார் நாளையில இருந்து வேலை ஆரம்பிக்கலாம் எப்டி எப்டின்னு சரியா சொல்லி தந்தீங்கன்னா புரிஞ்ச்சிப்பேன் என்று லேசான குரலின் கேட்டாள்.....!

சொல்றேன் ஒரு நிமிடம் என்றவன் வெளியில் எட்டி பார்த்து விட்டு யாருமில்லை என்பதை அறிந்ததும் உள்ளே வந்து அவளது செல்போனை வாங்கி ஸ்விட்ச் ஆப் பண்ணி அவனுடைய செல்லையும் ஆப் மேஜை மீது வைத்தான்.

என்ன சார் என்று புரியாமல் கேட்டாள்?பயத்தில் உச்சிக்கு போயிருந்தாள், பதட்டமுடன் இருந்ததை அவனும் அறியாமல் இல்லை????????

ஷ்........என்றவன் அமைதியான குரலில் அவளிடம் பேச ஆரம்பித்தான் 1மணிநேரம் பேசினான் இவளும் சந்தேகங்களை கேட்டுகொண்டாள் அனைத்துக்கும் சரியான விளக்கம் கொடுத்தான்......!

இறுதியில் இனி ஏதாவது சந்தேகம் இருக்கா?என்றுக்கேட்டான் இல்லை சார் என்றாள்..

சரி ஏதாவது கேட்கணும்னா கேட்கலாம் நாம் பேசியது யாருக்கும் தெரியக்கூடாது அதற்காகதான் இந்த தனிமையும் செல்போன் ஆப்-ம் புரிஞ்சிதா?என்று கேட்டு சிரித்தான்.

புரிந்தது போல் தலையாட்டினாள் ரியா...,

என் உதவிக்காகத்தான் உங்களை வேலைக்கு அமர்த்தியிருக்கேன் என் கூட இருந்து உதவிகள் செய்தால் போதும் சந்தேகங்கள் இருந்தால் கலந்தாலோசிக்கலாம் உங்கள் ஐடியாவை சொல்லலாம் தவறு என்றால் சுட்டிக்காட்டலாம் எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு ஓகே..என்றவன் தன் செல்போன் நம்பரையும் கொடுத்தான்.

இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

சாப்பாடு கொண்டு வந்தீங்களா?என்றான்...?

ஆமா சார் என்று பதிலளித்தாள்.

அது இருக்கட்டும் வாங்க வெளியில் ஹோட்டலில் போய் சாப்பிடலாம் என்றான்.
இல்லை என்று மறுத்தாள்.......

முதாலாளி சொன்னா கேட்க மாட்டீங்களா?கண்டிப்பாக வரணும் என்று பிடிவாதமாக கூப்பிட்டான்.

அவன் டார்ச்சர் தாங்க முடியாமல் வேறு வழியின்றி சரி என்று அவனுடன் சென்றாள்.

கிளம்பும்போது வந்தனாவுக்கு ஒரு மெசேஜ் பண்ணிவிட்டு கிளம்பினாள்.

அவனுடன் அவன் காரிலேயே அழைத்து சென்றான் வழியில் ஒரு கோவில் வரவே காரை நிறுத்த சொன்னாள் ரியா!
என்ன என்று கேட்டான்?

வரேன் என்று சொல்லிவிட்டு தன ஹேண்ட் பேக்கில் இருந்த அந்த சாப்பாட்டை அங்கு வெளியிலிருந்த பிச்சைக்காரர் ஒருவருக்கு கொடுத்து விட்டு மறுபடியும் வந்து காரில் அமர்ந்து கொண்டாள்......!

அவளது செயல் வசந்தை மிகவும் கவர்ந்தது...

ஒரு பெரிய ஹோட்டலில் மதிய உணவை முடித்தனர்.

சிறிது நேரம் பேசிவிட்டு மறுபடியும் ஆபிஸ்க்கு வந்து 2,3பைல்களில் கையெழுத்து போட்டுவிட்டு கம்பியூட்டரில் கொஞ்சம் நேரம் ஏதோ பார்த்துவிட்டு ஆபிஸ்க்கும் ரியாவுக்கும் பை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் வசந்த்......!

5மணி வரை அவளது இருக்கையில் அமர்ந்திருந்தவள் அதன் பிறகு ஒரு டீ குடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

வீட்டிற்கு வந்ததும் வந்தனா கீதுவிடம் நடந்த அனைத்தையும் சொன்னாள்.......

ஆனால் என்னன்னு தெரிலடி அவன பார்த்தாலே பாவமா இருக்குது நல்லவன் மாதிரி இருக்கான் என்று அவனை நல்லவனாய் சொல்லி பாவித்தாள்! இது வந்தனாவுக்கு மிகவும் எரிச்சலூட்டியது கோவமாய் அவளை பார்த்தவள்.......முதலில் அவன் இப்டி தான்டி இருப்பான் போக போக தான் அவன் வேலையை காட்டுவான் நீ லூசு மாதிரி அவனையும் நம்பி நம் நட்பிற்கு துரோகம் பண்ணிவிடாதே என்று கூறினாள்...

வந்தனா ஆவேசமாய் இருப்பது இவளுக்கு புரிந்தது உனக்கு எதிராய் எதுவும் பண்ணமாட்டேன் என்று அவளிடம் சத்தியமும் பண்ணிவிட்டாள் ரியா.......!

அவன் ஏதாவது காரணத்திற்காக உன்னை பிரிந்திருக்கலாம் ஒரு முறை நீ நேரடியாக அவனை பார்த்து பேசிப்பார் என்று தன் மனதில் பட்டதை சொன்னாள் ரியா! கீதுவும் ஆமாடி நீ ஒருக்கா பேசிப்பார் என்று அறிவுரை சொல்ல.......

திடிரென சீறியவள் முடிந்தால் எனக்கு உதவி பண்ணுங்க இல்லனா போங்க என்னால அந்த பணப்பேய் கிட்ட பேசமுடியாது மனசாட்சி இல்லாத மிருகம் என்று கத்தினாள் வந்தனா??????? அந்த இடமே அதிர்ந்து போனது..

அவளது கோவத்தைக்கட்டுப்படுத்த 2பேரும் படுக்கையறைக்கு சென்றுவிட்டனர்.....3பேரும் படுத்திருந்தாலும் கீது தூங்கிபோனாள் ஆனால் வந்தனாவுக்கும் ரியாவுக்கும் தூக்கம் வரவில்லை....வசந்த் விஷயத்தில் ரியா சொதப்பிவிடுவாளோ இவளை இப்படியே விட்டால் சரி ஆகாது நாளைக்கு எல்லா விஷயங்களையும் சொல்லிக்கொடுக்கணும் எப்படி சொல்லுவது என்று நினைத்துக்கொண்டிருந்தாள் வந்தனா.....

ரியா போனது என்னவோ அவனை பழிவாங்கும் எண்ணத்தில் என்றாலும் அவனது அந்த கட்டுக்கோப்பான தோற்றம் அந்த காதல் பார்வை அழகான புன்னகை இவற்றில் இவள் மனதை தொலைத்துவிட்டாள்......அந்த புன்னகையில் ஒருநாளில் பலமுறை கவிழ்ந்துவிட்டாள்.......இவனை பழிவாங்கும் எண்ணத்தில் நாம்தான் அவன் வலையில் விழுந்துவிடுவோமோ?நிச்சயம் கூடாது அவன் பார்வை மற்றும் புன்னகையை முடிந்தவரை நேரில் எதிர்கொள்ளாமல் இருப்பதே நமக்கு நல்லது என்று மனதிற்குள் ஒரு எல்கை அமைத்துக்கொண்டாள் ரியா.....!!!

வீட்டிற்கு சென்ற வசந்தின் மனது முழுவதும் ரியாவின் படம் ஓடிக்கொண்டிருந்தது.........

அவளது அழகு, பேச்சு, இரக்ககுணம் எல்லாமே சூப்பர்.....பார்க்க குடும்ப பெண் மாதிரி இருக்காளே மிக எளிதில் யாரிடமும் வசப்படமாட்டாள் எப்படி நம் வலையில் விழ வைப்பது என்று அதற்கான நேரத்தையும், இந்த ப்ராஜெக்டை எப்படி முடிப்பது என்ற நேரத்தையும் எதிர் நோக்கிக்கொண்டிருந்தான்..........!



தொடரும்.........!

எழுதியவர் : ப்ரியா (21-Jan-16, 10:22 am)
பார்வை : 317

மேலே