என் வானவில் தாண்டிப் போச்சு

சொல்லு சொல்லு ஒத்த சொல்லு நீ
சொல்லாம தா போற கொஞ்சம் நில்லு
கண்ணால கீறி நெஞ்ச கிழிச்செடுத்து போற
நின்னு தா பாறே நா என்னுசுர தாறேன்
ஓ வார்த்த கேக்க காத்து நின்னேன்
நீ வர்ற வழி பாத்து நின்னே
வந்து நீயும் சொல்லிப்போடி
ஏ சோளக்கதிரே சொக்குப்பொடியே
உசுரெல்ல நீதா ஓரஞ்சு போன தானா
கடந்து போற மானே கரஞ்சு போறே நானே
சொல்லுக்குள்ள சொர்க்கம் வச்சான்
ஓ மேனியில தேன வச்சான்
வண்டு எல்லா சுத்திக்கிட்டு உன்
மேனியத் தா நாடுதடி
மழையும் பொழிஞ்சு ஓ விழியு நனய
நனஞ்சு போன உன்ன பாத்து
தேடி ஓடுது வாடக் காத்து
கொடயத்தூக்கி உனக் காக்க
ஓடிவந்தே ஒனப்பாக்க
வாங்க மறுத்து நீ வீசி
வீட்டுக் கதவு தாண்டி போயி
எட்டிப் பாக்குற ஏந்தாயி
கிட்ட வந்து சொல்லிப் போடி
கிறுக்குப் பயலா ஆக்குற ஏன்டி
மழ நின்னு போச்சு கிட்டவந்து நின்ன
ஏக்கமெல்லா இறங்கிபோச்சு
மூச்சுக் கூட உறங்கிப் போச்சு
சொல்லிபோற பார்வையில
உசுர அள்ளிப்போற கூடையில
வார்த்த ஏதும் தோனவில்ல
என் வானவில் தாண்டிப் போகையில.

எழுதியவர் : செல்வா .மு (தமிழ் குமரன் ) (25-Jan-16, 7:59 pm)
பார்வை : 74

மேலே