பழமைப் பேசியே

பழமைப் பேசியே !

முயற்சியை மூலையில் ஒதுக்கிடாதே!
----------முழுதாக சோம்பேறி ஆகிடாதே!
இயற்கை என்றுமே எதிர்த்திடாதே!
--------ஏனென்ற கேள்வியை மறந்திடாதே!
பயிற்சியை ஒருநாளும் மறந்திடாதே
----------பெருந்தன்மை என்றும் இழந்திடாதே !

அன்பினை அளவாய் அளந்திடாதே !
-------அறிவினை பெருக்கிட சோர்ந்திடாதே
பண்பினை பாசத்தை மறந்திடாதே
-------பணிவாய் இருப்பதை தொலைத்திடாதே
பயமாய் இருப்பதாய் காட்டிடாதே !
--------பழமைப் பேசியே வாழந்திடாதே

----- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (25-Jan-16, 9:10 pm)
பார்வை : 147

மேலே