வெற்றிக்கு அப்பால் ---கார்த்திக் ,நெல்லை
இந்த பூமியில்
===எங்கு தேடியும் நீ இல்லை
தேடாத இடமில்லை
===ஏங்காத நாளில்லை
சில சமயம் என்
===இதயங்களின் அசரீரி
என் காதில் கேட்கிறது
அதன் சப்தம் நிச்சயமாய்
===உனக்கும் கேட்டிருக்கும் ....
என்பதை நானறிவேன் !!!
எனது மூளையின் மடிப்பின்
===வழியாக வளரும் எண்ண
அலைகளின் போக்கை
===அறிந்தவன் நீ மட்டும்தான் !!!
இப்போதெல்லாம் வெற்றிகளின்
சாம்ராஜ்யத்தை காட்டிலும்
நிம்மதியின் சாம்ராஜ்யம்
பெரிதாக படுகிறது !!!
ஆனால் ,என் மடமை மனதோ
வெற்றியின் ருசியில் மட்டுமே
நிம்மதி இருப்பதாய்
நம்பிகொண்டிருக்கிறது !!!
வெற்றி என்பது சமயங்களுக்கு
உட்பட்டது !
அதன் கால நேரங்கள் கணித்தலுக்கு
உட்பட்டது !
வெற்றி என்பது ஆசைகளின் அதன்
எதிர்பார்ப்புகளின் எண்ணத்திற்கு
பாத்தியப்பட்டது !
வெற்றி என்பது மகிழ்ச்சி தரும் சுழற்சி !
வெற்றியிலும்-தோல்வியிலும்
சுவாசத்தின் ஏற்றமும் இறக்கமும்
சமகோட்டில்தான் பயணிக்கிறது !!!
ஒன்று மகிழ்ச்சி எனும் வடப்புறத்திலும்
மற்றொன்று துக்கம் என்னும் இடப்புறத்திலும் !!!
இதன் இரண்டின் பிரிவிற்கும் மையம் உண்டு
அந்த மையத்தில் எண்ணங்கள் சில
பரப்பளவை உண்டு செய்யும்
அந்த பரப்பளவில்
பிரேமைகள் இருக்காது -பலதரப்பட்ட
பிம்பங்கள் வந்து மிரட்டாது !!!
கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கும்
கண்களின் ஒளியில் கந்தர்வதை
காணும் திறனிருக்கும் !!!
உண்மையில் மனிதன்
நிம்மதியை கடவுள் என்று
நினைக்கிறானோ என்னவோ ?
காரணம்
நிம்மதி வந்தவுடன்
கடவுளும் அது சார்ந்த காரணிகளும்
மெல்ல அவன் நினைவை விட்டு
நீங்கிவிடுகிறது !!!
ஓ மனிதா ........
இதயம் மெல்ல துடிக்கும் பொழுது
உன் சுவாசத்தின் இயக்கம்
சீராக இயங்கும் பொழுது....
மூளையில் சோர்வு தட்டாமல்
இருக்கும் பொழுது .....
சோம்பலோடு உறங்காமல்
உடலும் மனமும் இருக்கும் பொழுது ......
சீரான உழைப்பும் ,பசிக்கு உணவும்
அன்பு செலுத்த அண்டத்தாரும் .......
அரவணைக்க இவ்வுலக உயிர்களும்
கிடைத்தபொழுது நீ எதை தேடுவாய் ?
........***************.................************.................***************.............**************
என்றென்றும்
அன்புடன்
கார்த்திக்

