அன்றாடப் பொருள்கள் - 2

நித்தம் உந்தன் தரிசனம்
ஓடும் எந்தன் தினம்
நாளும் உன்னளவு அதிகரிக்க
நல்கும் உன்தடிமன் குறைய
எத்தனை வளர்ச்சி உன்னிடம்...

தொல்லையாக உன்னை நினைத்தாலும்
தொலையாது என் வாழ்வில்
கலந்த தொலைக்காட்சி பெட்டியே

***

மடிமீது தவழும் தங்கமே
அடியேன் வாழ்வின் அங்கமே
உறங்கா நாளின் பாதி
உனக்கு நான் அடிமை
வேலையில் மாலைவேளையில்
காணும் உந்தன் அனுபந்தம்
நாளும் நானும் கண்டேன்
நாண் அறுந்த வில்போல்
நானும் ஆவேன் நீயில்லாமல்
என்னருமை மடிக்கணணியே....

***

உன் உறவால் சோம்பேறி
நான் எனக்காட்டும் கண்ணாடியே
படங்களோ பாடல்களோ மையல்
கொள்வேன் உந்தன் மடிதனியிலே...

நாளும் உன்னுடன் நானென்றால்
நாளது எனக்கு விடுமுறையே..

மனைவியின் சத்தத்தையும்
செவி கொள்ளா செய்யும்
சோர்வின் சொகுசுவே
என் ஆசை சோபா இருக்கையே

****


தோளோடு தோள்கொடுக்கும் தோழனே
நாளும் பணியில் உதவும் உற்றவனே
எந்தன் பொருள்கள் ஏந்துபவனே
உன்னை என்றும் சுமப்பேன் தோளோடு
என்னருமை தோள்ப்பையே...

******

- செல்வா

எழுதியவர் : செல்வா (26-Jan-16, 9:13 pm)
பார்வை : 55

மேலே