நான் தேவை இல்லை

நான் தேவையில்லை !

காற்றின்றி
குழலில்
கானம் எழாது

துடுப்பின்றி
ஆற்றில்
படகு ஓடாது!

விதையின்றி
விருட்சங்கள்
விளையாது !

சிரிப்பின்றி
முகம்
மலர்ச்சியுறாது!

போட்டியின்றி
வணிகம்
செழிக்காது!

மேகமின்றி
மழையும்
பொழியாது!

மின்னலின்றி
இடியும்…
இடிக்காது!


எல்லாவற்றுக்கும்
ஏதாவது ஒரு
துணை வேண்டும்

நான் யார் என்றே
அறிந்திட
”நான்” தேவையில்லை

எழுதியவர் : கே. அசோகன் (27-Jan-16, 9:16 pm)
Tanglish : naan thevai illai
பார்வை : 312

மேலே