வேண்டும்

"பக்தை உன் தவம் கண்டு மெச்சினேன்
வேண்டும் வரம் கேள்"
வேண்டும் வரம் வேண்டாம்
வேண்டா வரம் தருவீரோ?
மலர்கள் கேட்டாள் வனமே தருபவன் வேண்டாம்
தள்ளி போகாமல் அன்பால் அடக்குபவன் வேண்டாம்
தவறுகளை நிராகரிப்பவன் வேண்டாம்
தேவதையாய் கொண்டாடுபவன் வேண்டாம்
தங்கத்தால் அபிசேகம் வேண்டாம்
கொஞ்சலாய் கெஞ்சலாய் பிதற்றங்கள் வேண்டாம்
'நீ நான் நம் காதல்' இசை பாடுபவன் வேண்டாம்
"பிறகு, யார் தான் வேண்டும் பக்தை?"

வேண்டும்,

அன்பால் சிறகு வேண்டும்
சிறை வேண்டாம்
கேட்பதை தருபவன் போதும்
தருவதை நிறைவாய் தருபவன் போதும்
தவறை அணைப்பவன் வேண்டும்
கை விடுத்தது நடப்பவன் வேண்டும்
விழுந்தாலும், எழுவதை ரசிப்பவன் வேண்டும்
இரத்தமும் சதையும் கொண்ட
மனுசியாய் என்னை பார்ப்பவன் வேண்டும்
உரிமையுடன் சுடும் சொற்கள் வேண்டும்
வடுவாகும் முன் மருந்து வேண்டும்
சுற்றத்துடன் காதல் வேண்டும்
சுயம் தேயாத சுதந்திரம் வேண்டும்
மொத்தத்தில்
காதலில் விழுபவன் வேண்டாம்
எழுபவன் வேண்டும்.

எழுதியவர் : (27-Jan-16, 11:54 pm)
சேர்த்தது : ஆத்மதர்சனா
Tanglish : vENtum
பார்வை : 55

மேலே