புதுவித காதல்

பெண்ணே,

கைபிடித்து பொடிநடையுற்று,
வெகுநேரம் வீண்கதையிட்டு,
காலம் கழிக்கும் காதலை
நான் மறுக்கிறேன் பெண்ணே!

காதலெனும் காமத்தால்
உன் உடலில் ஊடுருவ
நான் ஒருபோதும் முயலமாட்டேன்!

முத்தத்தால் வளர்ந்த காதல்
மோகத்தில் நுழைந்த காதல்
நேரம் கழிக்கும் காதல்
கொஞ்சி பேசும் காதல்
இத்தனையும் வீசி எறிந்து
சாதனைக்காதல் கொண்டு
வந்தேன் பெண்ணரசி!

நேரம் கழிக்கும் நேரத்தில்
உன் திறமையை வளர் பெண்ணே!
போதிய நேர இடைவெளியில்
உன் திறமையை எனக்கு காட்டு கண்ணே!

முத்தமிடும் காலத்தில்
நாம் வருங்காலம் பேசுவோம்!

வீண்கதை சொல்லும் நேரத்தில்
நாம் எதிர்கால தேவைக்கு
உழைப்போம்!

புதருக்குள் சில காதலர்கள் மத்தியில்
நாம் புதர் இடித்து அங்கே
எதிர்கால வீட்டிற்க்கு
அளவு பார்ப்போம்!

காமத்தில் உறையும் காதலர்கள்
மத்தியில்,
நாம் சில கவிதையினை படித்து
ஞானம் கொள்வோம்!

காமத்தால் வரும் அவலஓசையை
வெறுத்து,
கண்ணே,வரலாறு குரல் சற்று கேட்போம்!

கடற்கரை செல்லும் நேரத்தில்
கதையினை படித்து கற்பனை
வளர்ப்போம்!

சில நேரம் நாமும் ஓய்வு கொள்வோம் பெண்ணே.
நீ படித்த கதையினை எனக்குச்சொல்!
நான் படித்த கதையினை உனக்குச்
சொல்லுகிறேன்!

சில நேரம் நாமும்
நகைச்சுவையில் மூழ்குவோம்!
வெளிக்காதலை சொல்லிச்சொல்லி!

இயற்க்கை காற்றை சுவாசிக்க,
நடைமுறை வாழ்வை தெரிய
சில மணிகள் வெளியை காண்போம்!

இத்தனை முயலும் நேரத்தில்
உலகம் நம்மை உமிழும்!

கவலை விடுபெண்ணே,
ஒரு நாளில் நம்மை வெரித்து பார்க்கும்,
அன்று ,
நான் கவிஞனாக இருக்கலாம்!
நீ விஞ்ஞானியாய் இருக்கலாம்!

அன்று யோசிப்போம் நமக்கு
குழந்தை தேவை என்றால்
ஊடல் செய்ய!!!!

எழுதியவர் : (28-Jan-16, 1:02 pm)
Tanglish : puthivitha kaadhal
பார்வை : 298

மேலே