உன் காதலின் நினைவுகளை மறந்துவிடு 555

உயிரே...

நாம் பயின்ற அந்த கல்லூரியில்
முதன்முதலில் அறிமுகமானோம்...

சில நாட்களில் நாம் சேர்ந்தே
அமர்வோம் கல்லூரி வளாகத்தில்...

என் தோலின் மீது
தலை சாய்வாய்...

என் தோள்மீது கைபோட்டு
பேசுவாய்...

செல்லமாய் என் கன்னங்களை
நீ கிள்ளிவிளையாடுவாய்...

நம்மை கடந்து செல்லும்
பெண்களை நான் பார்த்தால்...

உன் கண்கள் கோவத்தில்
சிவப்பதை பார்த்திருக்கிறேன்...

அப்போது நீ இதழ்திறந்து
சொல்லி இருக்கலாம்...

நீ என்னை
நேசிக்கிறேன் என்று...

இன்று ஒரு
மழலைக்கு நீ தாய்...

உன் தோழி ஒருத்தி சொன்னாள்
எதார்த்த சந்திப்பில்...

நீ என்னை
அன்று நேசித்தாய் என்று...

நட்பை உணர்ந்த நான்
உன் காதலை உணரவில்லை...

உயிரே என்னை
மன்னித்துவிடு...

சொல்லாத உன் காதலின்
நினைவுகளை மறந்துவிடு...

என்றும்
உன் தோழனாக நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Jan-16, 4:21 pm)
பார்வை : 1229

மேலே