ஒரு குழப்பம் தான்
உன்னிடம் நான் பேசத்தயங்கிய அந்த நொடிகள்தான் என்
இதயக்கூடு உன்னை
மேலும் அழகுபடுத்திக் காட்டியது!
உறக்கத்தில் என் கண்கள்
மூடும்போது ஒருபோதும்
உன்னை நினைத்ததில்லை,
இருந்தும் கனவில்
தவறாமல் வருவாய்!
உன் நிழல்மேல் நான்
ஒவ்வொரு நாளும் பொறாமை
கொண்டதுண்டு!
எந்த வரம் பெற்றதோ உன்
காலடியில் கிடப்பதற்க்கு!!
ஒருநாள் நீ ஓரமாய்
பார்த்த பார்வை தான்
என் மனத்திரையரங்கில்
100நாள் தாண்டி வெற்றிகரமாய்
ஓடிக்கொண்டே தான் இருக்கிறது!
தென்றலுக்கு நான்
நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்!.
அவள் துப்பட்டாவை என் மேல்
தொட வைத்ததற்க்கு!
மணிகள் மணிகளாய்,
நிமிடம் நிமிடமாய்,
நொடிகள் நொடிகளாய்,
என் மூளையின் வேலை உன்னை
மட்டுமே நினைப்பதற்க்குத்தான்
பெண்ணே!
அலைகளில் வரும் நுரைகள்
உன் கால்விட்டு போகமனமில்லாமல்
உன் காலருகே ஒட்டிக்கொண்டது பெண்ணே,அதை நீ கொலுசு என்கிறாய்!
அன்று வழக்கம்போல்
உன் கல்லூரி வாசலில் நின்றிருந்தேன்.
நீ என்னைநோக்கி வந்து
இது போல் கவிதையினை
கொடுத்துவிட்டு சென்றாய்!
ஒரு குழப்பம்தான் எனக்கு?
அவளும் என்னை காதலிக்கிறாளோ!?