புரட்டப்படாத மீனவனின் பக்கங்கள்

வெயிலின் அகோரத்தில்
கறுத்துப்போன முகங்கள்
கந்தலாகும் நிலையில் ஆடைகள்
தைக்கப்படும் வலைகள்
ஆங்காங்கே புகைக்கப்படும்
பீடிகளின் புகைமண்டலம்
ஏலேலோ ஐலசா ஓசையுடன்
இழுக்கப்படும் படகுகள்
பெரு மழைக்கும் சூறாவளிக்கும்
அஞ்சாதவர்கள்
உப்புக்காற்றை சுவாசித்தே
குடும்பத்தின் சுவாசத்தை
உறுதிப்படுத்துபவர்கள்
குளிரும் பசியும்
அவர்களின் உற்ற நண்பர்கள்
எல்லை தாண்டினால்
மாதக்கணக்கில் மற்ற நாட்டின்
குற்றவாளிகள்
இத்தனைக்கும் பிடித்த மீன்களை
கஸ்டப்பட்டு கரை சேர்த்தால்
முதலாளிக்கே தாள வாத்தியம்
மிஞ்சியதை பங்கு போட்டால்
ஆளுக்கு ஐநூறோ ஆயிரமோ
குடும்பத்தை சமாளிப்பதங்கே
பால் பக்கட் வாங்குவதங்கே
டியூசன் பீஸ் கட்டுவதங்கே
தண்ணீரில் மிதக்கும்
இவர்களின் வாழ்க்கை
நிதமும் கண்ணீராலேயே
கழுவப்படுகிறன.

எழுதியவர் : கிண்ணியா குறிஞ்சி (1-Feb-16, 7:43 pm)
சேர்த்தது : Kinniya Kurinchi
பார்வை : 161

மேலே