வெற்றி செந்தூரம்

செந்தூர் அருகே உள்ள
தான் பிறந்த ஊரான
மூலைப்பொழி கிராமத்துக்கு
தன் ஒவ்வொரு சாதனையாலும்
வெற்றி செந்தூரம் இட்டார்
ஷிவ் நாடார்.
வெற்றியாளரின் பெருமை -- அவர்
பிறப்பூருக்கும் உண்டன்றோ?

தொழிலதிபராய் சாதித்தார்!
கல்வியில் சிறந்து சாதித்தார்!
SSN பொறியியல் கல்லூரி நிறுவி
அதில் ஆராய்ச்சியை மேம்படுத்தினார்!
தான் படித்த பள்ளிக்கு
கணணியும் உபகரணங்களும் தரமாக
கொடை தந்தார்!
தகவல் தொழில் நுட்ப
உற்பத்தி பங்களித்து
பத்மபூஷன் விருது பெற்றார்!
மென்பொருள் தொழில்நுட்பம்
மேம்படுத்தி
கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்!
தகவல் தொழில் நுட்ப துறையை
இந்தியாவில் உயர்த்துவதில்
வெளிநாடுகளுடன் --
துணிந்து போட்டியிட்டார்.

வெற்றி செந்தூரங்கள் தொடர்ந்து இட்டாலும்
பயணம் நெடுந்தூரம் என பொறுப்போடு உணர்ந்து
சாதனை மனிதர்கள் வாகனம் போல் பறக்கும்
லட்சிய நெடுஞ்சாலையில் நில்லாது பயணிப்பவர்!

எழுதியவர் : ம கைலாஸ் (2-Feb-16, 11:24 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 82

மேலே