தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து13---ப்ரியா

ரியாவும் வசந்தும் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஹோட்டலில் வந்த ஒருவன் "என்னடா அந்தக்கிளி பறந்து போயிடிச்சா? இது என்ன புது ஐட்டமா?"என்று ரியாவை ஓரப்பார்வையால் பார்த்துக்கொண்டே கேட்டான்.......அவன் இப்படி சொன்னதும் அந்த இடம் கொஞ்சம் பரபரப்பானது ரியாவுக்கும் மனதிற்கு கஷ்டமாகிவிட்டது,என்ன சொல்வதென்று தெரியாமல் சாப்பாடும் இறங்காமல் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் வந்தன அழுதுகொண்டே எழும்பி வெளியே வந்து விட்டாள்.....

உள்ளே அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்வதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள், சிறிது நேரத்தில் அவனும் வந்து சேர்ந்தான்..........வாங்க போகலாம் என்று அழைத்தான் கண்களை துடைத்துக்கொண்டு அவளும் ஒருமுறை ஹோட்டலுக்குள் இருக்கும் அவனை பார்த்துவிட்டு வேகமாக காரில் ஏறினாள்.

காரை அவர்கள் தங்கியிருக்கும் காம்பவுண்டுக்குள்ளே நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே சென்றனர்."யாரவன் உங்களை அப்படி அசிங்கமாக திட்டினான்" என்று கேட்க நினைத்தவள் அவனை பார்த்துவிட்டு எதுவும் கேட்காமல் மௌனமானாள்....!

அவளது அந்த பார்வையை புரிந்துகொண்டவனாய்...... உள்ளே சென்றதும் ஏதாவது சொல்லி சமாளிப்போமென்று......"அங்கு என்னிடம் பேசியவன் எனது முன்னாள் நண்பன் தற்போதைய எதிரி எனக்கும் அவனுக்கும் தொழில் ரீதியாக பிரச்சனையானதால்தான் உங்க முன்னால் வைத்து வேண்டுமென்றே இப்படி பேசிவிட்டு செல்கிறான்"என்று சொல்லி.......அவளது நாடியை உயர்த்தி என்னை மன்னித்துவிடு அவன் அப்படி நடந்து கொள்வான் என்று நான் கற்பனைக்கூட செய்து பார்க்கவில்லை என்று அவளிடம் கெஞ்சினான்.

"உன் குட்டு எனக்கு தெரியாதா? வேஷக்காரன்" என்று மனதிற்குள் நினைத்தவள்.....வெளிப்படையாக "பரவாயில்லை" என்று மட்டும் சொன்னாள்.

இருந்தாலும் என்னை பழிவாங்கும் எண்ணத்தில் உங்கள் முன்னால் அவன் அப்படி நடந்ததை நினைக்கும் போது மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதீங்கள்..........சரி நான் அந்த பால்கனியில் தூங்குறேன்,நீங்க இங்க படுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மெல்ல நழுவி விட்டான்...!

அவன் மேல் இவளுக்கு வெறுப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது....எவ்ளோ சீக்கிரம் வந்தனா விஷயத்தை முடிக்க முடியுமோ அவ்ளோ சீக்கிரமா முடிச்சிட்டு போயிட்டே இருக்கணும் என்ற எண்ணத்துடன் போய் படுத்தாள்!

காலையில் வசந்த் தன் நிறுவனத்திற்கு கால்பண்ணி செலெக்ட் ஆன விபரத்தை சொல்லிவிட்டு நாளைக்கு அங்கும் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டான்......

உள்ளிருந்து வந்த ரியாவிடம் ஊருக்கு சென்றதும் நம் காதலை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் அதற்காகவும் சேர்த்துதான் பார்ட்டி என்று கண்சிமிட்டினான்.

இவனை எப்படி சமாளிப்பது இதை எப்படி தடுப்பது என் நினைத்தவள்.....திடீரென ஒரு முடிவு எடுத்தாள்?
என் தோழிகளுக்கு திருமணம் நிச்சயமான பிறகுதான் நம்காதலை சொல்லவேண்டும் அதுவரைக்கும் இதைப்பற்றி வெளியில் சொல்லவேண்டாம் இன்னும் 1மாதம் இதைப்பற்றி பேசவேண்டாம் என்று சொல்லி அவனது காதல் விளையாட்டிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்......?
__________________________________________________________________________________________________________________________________________________________
கீதுவின் வருங்கால கணவர் வந்தனாவின் டயரியிலிருந்த அந்த போட்டோவை வைத்து இவனை உனக்கு எப்படித்தெரியும்? என்று கோவத்தை கண்களில் வைத்து முறைத்து கேட்டான்?

வந்தனா காதல் முதல் இன்று நடந்த நிகழ்வுகள் வரை விபரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் கீது!

அவனது முகத்தில் இப்பொழுது ஒரு தெளிவு பிறந்தது கீதுவுக்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லை என்றதும் மகிழ்ச்சியடைந்தான்...இருந்தும் கோவம்...அடிப்பாவிங்களா?இப்படியெல்லாமா பண்ணுவிங்க? ஏதாவது பிரச்சனையில மாட்டிக்கிட்டா என்ன ஆகும்னு கொஞ்சமாவது யோசிச்சீங்களா?அவனே பெரும் மோசக்காரன் அவனிடம் மறுபடியும் போய்........என்றவன் தலையில் குட்டி யோசித்தான்!

வந்தனாவை அவன் ஏமாற்றினான்,அவளுக்கு அவன் எப்படிப்பட்டவன் என்ற முழு விபரமும் தெரிஞ்சும் ரியாவை இப்படி அனுப்பியிருக்கிறாள்....அறிவாளி நீயாவது சொல்லியிருக்கலாம் இல்ல என்று அவள் தலையை தட்டினான்!

(சிறிதுநேர யோசனைக்குப்பின்)
சரி!இறங்கினது இருக்கட்டும் ரியாவுக்கு கால்பண்ணி மிகவும் கவனமாக இருக்க சொல்,அவள் சென்னைக்கு வந்ததும் முதல் வேலையாக நம் ஊருக்கு உன் தோழிகளை வரச்சொல் நான் ஏதாவது பண்றேன் பொண்ணுங்க இந்த விஷயத்துல ஈடுபட்டா நல்லா இருக்காது............அதுவும் என் வருங்கால மனைவியின் தோழிகளின் பெயர் கெட்டு போகலாமா????அதனால எல்லாம் நான் பார்த்துக்குறேன் என்று நம்பிக்கையாய் சொன்னான்....!

அவனது இந்த நம்பிக்கையான தெளிவான பேச்சு கீதுவுக்கு சரி எனபடவே.........சரிங்க அடுத்தவாரம் நம்ம கோயில் திருவிழா வருகிறது கண்டிப்பாக அவர்கள் வருவார்கள் அப்பொழுது பேசி ஒரு முடிவெடுக்கலாம் என்று தன் பதிலையும் சொன்னாள்....!

உடனே ரியாவுக்கு கால்பண்ணினாள் கீது......வழக்கமான விசாரிப்புகள் முடிந்த பிறகு....... என் வருங்காலக்கணவர் "விஜய்" பக்கத்துலதான் இருக்காங்க பேசுறியா?என்றவள் ரியாவின் பதிலையும் எதிர் பார்க்காமல் விஜயிடம் போனைக்கொடுத்தாள்.......

ஹலோ!ரியா எப்படி இருக்கீங்க? என்று கேட்டவன் வசந்தை பற்றி சுருக்கமாக சொல்லிவிட்டு இப்போது எந்த விஷயத்திலும் நீங்கள் முடிவு எடுக்காதீங்க, நீங்க நினைக்கிறத விடவும் மோசமானவன்தான் அவன் பெரும் மோசக்காரன், எதிலும் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள் உங்கள் திட்டம் தெரிந்தால் உங்களை என்ன வேணும்னாலும் பண்ணுவான் இங்க வருகிறவரைக்கும் அவனுக்கேற்ற மாதிரி நடந்து கொள்ளுங்கள் எதிலும் கவனம் என்று அவளை பேசவிடாமல் இடைவிடாமல் அவனே அறிவுரைக்கூறிக்கொண்டிருந்தான்,,,,,,,

தனக்கு அடுத்து வரப்போகும் பேராபத்தைப்பற்றி அறியாமல்.....விஜய் நமக்காகத்தான் சொல்கிறான் என்று பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தாள் ரியா.........



தொடரும்......!

எழுதியவர் : ப்ரியா (3-Feb-16, 12:36 pm)
பார்வை : 322

மேலே