குறை கூறும் கவிஞன்

குறை கூறும் கவிஞன்

இயற்கை கவிதை எழுத
தொடங்கினேன் மரங்கள் சாய்ந்தன

குளங்களை பற்றி பாட
தொடங்கினேன் அணைகள் வற்றின

புன்னகைகளை பற்றி எண்ணங்களை
கூறினேன் முகங்கள் வாடின

மலர்களை பற்றி உணர
தொடங்கினேன் கூந்தல் சூடின

குறைகளை பற்றி கூறினால்
குறைகள் தீருமா

குமுறல்களை பற்றி குமுறினாள்
குமுறல்கள் சாகுமா

முட்களை பற்றி குத்தினால்
முட்களின் கூறு மழுங்குமா

மௌனத்தை பற்றி சாய்ந்தால்
மௌனம் செவி சேருமா

பிணங்களை பற்றி சாய்ந்தால்
இனங்களின் எண்ணிக்கை நிரந்தரமா

நான் எப்போது உன்னை
பெருமையில் மட்டும் வர்ணிப்பேன் ?

நான் எப்போது என்னை
சிறுமையில் இருந்து துண்டிப்பேன் ?

யோசித்தால் விடைகள் ஒன்றே

நினைத்தால் விருப்பங்கள் வேறே

நான் ஒரு வேலை

குறை கூறும் கவிஞன் ஆவேனோ ?
நிறை மறக்கும் கவிஞன் ஆவேனோ ?

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (4-Feb-16, 2:08 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 155

மேலே