சின்ன அரும்பு மலரும் மகிழ்ச்சி

பங்காளிகள் (1961) என்ற திரைப்படத்தில் கவிஞர் அ.மருதகாசி இயற்றி, V தக்‌ஷிணாமூர்த்தி இசையமைத்து அஞ்சலிதேவி குழந்தையைத் தாலாட்டும் காட்சிக்காக, இசைகுயில் பி.சுசீலா பாடும் ஒரு இனிய பாடல்.

உனது மாமன் வருவான், அணைத்து இன்பம் பெறுவான், சுகம் பெருகும் நாள் வரும் என்று குழந்தைக்கும், தனக்கும் ஆறுதல் சொல்லிப் பாடும் கருத்தான பாடல். யு ட்யூபில் கேட்டு மகிழலாம்.

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் - நான்
களிக்கும் நாள் வரும் (சின்ன அரும்பு)

மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே
மனம் மகிழும் நாள் வரும் - நான்
மகிழும் நாள் வரும் (சின்ன அரும்பு)

உனது மாமன் வருவான்
அணைத்து இன்பம் பெறுவான்
உனது மாமன் வருவான்
அணைத்து இன்பம் பெருவான்
உரிமை எல்லாம் தருவான் –அந்த
அரிய நாள் வரும் – சுகம்
பெருகும் நாள் வரும் (சின்ன அரும்பு)

ஏழை கண்ட கனவே – மனம்
இளகச் செய்யும் அழகே
ஏழை கண்ட கனவே – மனம்
இளகச் செய்யும் அழகே
வாழைக் குருத்து போலே
நீ வளரும் நாள் வரும்
குலம் தழைக்கும் நாள் வரும் (சின்ன அரும்பு)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Feb-16, 10:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 670

மேலே