சண்டைக்கு பின்

பேருந்திற்காக காத்திருக்கும் சமயம், அம்மாவுடன் சிறு வயதில் வெளியே செல்ல அவ்ளோ ஆர்வமாய் கிளம்பி இதே பேருந்து நிலையத்தில் எவ்வளோ நேரம் நின்று இருக்கும் போது தோன்றாத ஒரு வித சலிப்பு இப்போது தோன்றுகிறது. பழக பழக பாலும் புளிக்கும் அது போலவா..

இன்னும் வர காணுமே.. மணி வேற ஆகிறது.. ஒரு பேருந்து கூட வரலையே.. எப்போதும் இது ஒரு பிரச்சினை..என்ன பயனியர் நிழற்கொடையோ, காலை 9 மணிக்கு கூட ஒதுங்கி நிற்க நிழல் இல்லை..

ம்ம்.. காலையில் சண்டை போட்டுவிட்டு வந்து இப்படி நிற்கும் நேரம் என்ன என்னவோ தோன்றுகிறது..என்ன இருந்தாலும் நான் கொஞ்சம் அமைதியா பேசி இருக்கலாம்.. என்ன செய்ய முடியும் அவனால் மட்டும்.. என்ன என்னமோ பேசி விட்டு நான் வந்துவிட்டேன்..

அவனும் வேலைக்கு சென்று இருப்பான்.. இப்போ பேச கூட முடியாது .. என்னை போல அவனும் என்ன என்ன எல்லாம் யோசித்து கொண்டு இருப்பானோ... சாப்பிட்டு இருக்கமாட்டான்... மதியம் அலைபேசியில் அழைத்து சொல்லிவிட வேண்டும்.. இல்லை என்றால் இருவருக்குமே பொழுது சரியாக அமைந்துவிடாது ..

மாலையில் நிச்சயம் சந்தித்தே ஆக வேண்டும்.. ஆனால் வேலை முடியும் நேரம் ஒருவேளை அதிகமானால் அதும் இன்னும் கோபம் உண்டாக்கும்..ம்ம்.. இதும் சரிவராது.. எப்போதும் போல வார விடுமுறையிலேயே வைத்துக்கொள்ளலாம்.. ஆனா எப்படி சமாதானமாவது.. மதியம் பேசி பார்க்கலாம்..

சின்ன விஷயம் தான்.. பேசி பேசியே பெரியதாய் ஆகிவிட்டது .. நல்ல வேலை இன்னும் பெரிதாகவில்லை..

பேருந்து வந்துவிட்டது..

- வைஷ்ணவதேவி

எழுதியவர் : வைஷ்ணவதேவி (4-Feb-16, 10:49 pm)
சேர்த்தது : vaishu
Tanglish : saNDaikku pin
பார்வை : 645

மேலே