தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து14---ப்ரியா

கீதுவின் தலைவன் விஜய்-ன் அறிவுரைகளை கவனமாய் உள்வாங்கிக்கொண்டிருந்தாள் ரியா..காரணம் அவன் சொல்வது முழுக்க முழுக்க உண்மையே அவர்களுக்கு எந்த தீங்கும் வரக்கூடாது என்ற நோக்கத்தில் புரியும் படி உணர்த்திக்கொண்டிருந்தான். இப்போதைக்கு நீங்கள் ஏதாவது சமாளித்து விட்டு அவனுக்கேற்றார் போல் உங்களுக்கு தீங்கு நடக்காமல் நடந்துகொள்ளுங்கள் மற்றதை ஊரில் வந்து பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.......!

ஆழ்ந்த யோசனையில் இருந்தவளுக்கு விஜய் சொல்லும் ஐடியா சரி எனப்பட்டதால் வந்தனாவுக்கு கால்பண்ணி இங்கு நடந்ததையும் விஜய் பேசினதையும் சுருக்கமாக சொன்னாள்..அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த வந்தனா சரிடி எப்போ கிளம்புறா?என்று கேட்டாள் தெரிலடி ஒரு நிமிடம் என்றவள்.....செல்போனை காதில் வைத்துக்கொண்டே மெல்ல உள்ளே வந்து வசந்தைப்பார்த்தாள்.....சார் எப்போ கிளம்புறோம் என்று வசந்திடம் கேட்க?

இன்னிக்கு 6மணிக்கு என்னுடைய நண்பன் ஒருவன் ஊரிலிருந்து வருகிறான் கம்பெனி விஷயமா கொஞ்சம் பேசணும் பேசிட்டு உடனே கிளம்பிடலாம் என்றான்...!

ம்ம்ம் என்று சந்தோஷமாய் தலையசைத்தவள் "இன்னிக்கே கிளம்புறேன்டி வந்து பேசலாம்"என்று வந்தனாவிடம் சொல்லிவிட்டு உள்ளே வந்தாள்.

யாரு உங்க ப்ரண்டா?என்றான்?

ஆமா!என்றாள் ரியா.

சரி 6மணிவரைக்கும் இங்கே இருக்கிறது போர் அடிக்கும் பக்கத்துல ஒரு அழகிய பூங்கா இருக்கிறது அங்க போயிட்டு வருவோமா?கொஞ்சம் ரிலேக்சா இருக்கும் என்று என்று கேட்டான்...?

சரி என்றவள் அவனுடன் சென்றாள்.

பூங்கா என்றாலே அழகுதான் மனது மெலிதாகிவிடும் கோவம் சோகம் என எது இருந்தாலும் அனைத்தும் மறைந்துபோகும் அதன் அழகிய எழில்மிகு காட்சி இருவர் மனதையும் கொள்ளையடித்தது, ரசித்துக்கொண்டே இருவரும் நடந்து சென்றனர்!

அப்பொழுது அங்கிருந்த ஒரு இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்....காதல் மன்னன் மாதிரி காதல் கதை பேசுவானே என்ன பண்றது என்று பதற்றத்துடன் உட்கார்ந்து கொண்டாள்.

ஆனால் அவன் மாறாக அவனுடைய கம்பெனி விஷயத்தைப்பற்றி பேச ஆரம்பித்தான் ஐயோ அரைத்த மாவை அரைக்கிறானே என்றவள் வேறு வழியில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்......ஆனால் அவன் இப்போது அவனுடைய ஆபிஸ் நண்பர்களையும் அவர்கள் செய்த நலன், கெடுதல் என எல்லாவறையும் சொன்னான்..........புதுக்கதை என்பதால் கொஞ்சம் சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்தாள்....!

அவனுடன் இருந்த போது அவளும் நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளாள் என்பது அவள் உள்மனதுக்கு தெரிந்தது ஆனால் அதை அவள் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை, தன் தோழிகளை பிரிந்து நிம்மதியாக இது வரைக்கும் இருந்தது இல்லை ஆனால் இந்த மூன்று நாட்களும் இவளையும் அறியாமல் அவன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது வந்தனாவை நினைத்து நினைத்து அவனை மனதிற்குள் ஏற்றாமல் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டாள்.....இவனது கனிவான மற்றும் கட்டளையிடும் பேச்சு இரண்டையும் ரசித்தாள் காதலை வீசும் மற்றும் கோவத்தை தெறிக்கும் கண்கள் என இரண்டுக்குமே அடிமையாகினாள்.....கோவமாய் திட்டும் போதும் காதல் வசனம் பேசும் போதும் அவன் உதடுகளின் அழகை ரசித்தாள்......ஆனாலும் அவன் மீது அவளுக்கு காதல் இருப்பதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை.

எந்த ஒரு பெண்ணுக்கும் தனது மனதிற்கு பிடித்தவனை பார்த்தால் அவனுடன் வாழ்ந்தால் வாழ்க்கை நல்லா இருக்குமென்ற எண்ணம் தோன்றும் அதே போல்தான் ரியாவும்....ஆனால் வசந்த் கெட்டவன் என்று தெரிந்ததால் அவனை வெறுத்திருக்கிறாள் இல்லையென்றால்..........இதற்குமுன் திருமணம் வரைக்கும் போயிருக்கும்...?

மௌனமாய் இருவரும் இயற்கையை ரசித்துக்கொண்டிருக்க......நேரம் போனதே தெரியவில்லை அவனது நண்பனும் வந்துவிட்டான் 30 நிமிடங்கள் பேசிமுடித்த பின் கைகுலுக்கி இவளுக்கும் ஒரு வணக்கம் வைத்துவிட்டு கிளம்பினான்....!

இவர்களும் கிளம்ப...காரின் முன்னிருக்கையில் ரியாவை அமர சொன்னான்.

அவளும் மறுப்பு தெரிவிக்காமல் அவனது பக்கத்தில் உட்கார்ந்தாள்.....பயணித்துக்கொண்டிருக்கும் போது சில காதல் வசனங்களை பேசினான் அவளும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை(இப்படி நடிக்கிறான்)என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் வந்தனாவிடம் பேசியது போல் தான் தன்னிடம் பேசுகிறான்..வந்தனாவைத்தவிர இன்னும் எத்தைனைப்பெண்களோ? என்று நினைத்தவள் பெருமூச்சுடன் சீட்டில் சாய்ந்து கொண்டாள்.....!

சிறிது நேரம் கழித்து அவளது தலைமுடியை அவனது கைகளால் கோதிக்கொண்டிருந்தான் திடீரென கண்விழித்தாள் அப்பொழுதுதான் புரிந்துகொண்டாள் அவன் தோளில் தான் சாய்ந்திருப்பதை....திடுமென எழும்பியவள் உதறிக்கொண்டு "ஸாரி" என்று சொல்லி நிமிர்ந்து கொண்டாள்...!

அவள் பதற்றமாக இருந்தாள் ஆனால் அவனோ மிகவும் சந்தோஷமாக இருந்தான்.

ஏன்? இப்படி படபடக்கிறாய் இன்று நான் உன்காதலன் வருங்கால கணவன் என்று சொல்லி அவள் கையை பிடித்து தன்கைக்குள் அடக்கிக்கொண்டான்,தன் காதலை உண்மை என சொல்லும் வண்ணம் மறுபடியும் அவளது கையை பிடித்து முத்தம் கொடுத்தான்...அவளது கைகள் நடுங்கின தப்பு பண்றோமே என்று உடம்பு கூசியது அவனது பிடியை விட்டு விலக முயற்சித்தாள் ஆனால் அவன் விடவில்லை......அந்த நேரம் அவளை அறியாமலேயே அவன் மேல் அவளுக்கு எல்லையில்லா காதல் இருப்பதை உணர்ந்தாள்.......தாயின் மார்பில் ஒட்டிக்கொள்ளும் சிறு பிள்ளைபோல் அவனது மார்பில் ஒட்டிக்கொண்டாள்...!

அவன் தோளில் சாய்ந்தவாறே கண்களை மூடி அவன் மீது கொண்ட காதலை நினைத்துப்பார்த்தாள்......

ரியா கண்களுக்கு(மனதுக்குள்)வசந்த்.......

அளவான உயரம் அதற்கேற்ற உடல்வாகு, அவன் பேச வந்த செய்தியை கண்கள் சொல்லிவிடும் உதடுகளோடு கண்களும் பேசும், சிரிக்கும். சிரிக்கும் போது பூக்களே வெட்கத்தில் தலை கவிழும் அத்தனை அழகு!பூக்களே இவன் புன்னகையை ரசிக்கும்......அப்படியிருக்கும் போது இவள் மட்டும் விதிவிலக்கா?என்ன??.
இளம்பெண்கள் அனைவரது மனங்களையும் கொள்ளையடிக்கும் கள்வன்..,இப்படியே அவன் நினைவுகளில் காதல் தேசத்தில் மூழ்கியவளுக்குள் ...... கணீரென வந்தனாவின் குரல்கள் இதயத்தில் கேட்டது........" என்னை காதலித்து ஏமாற்றியனிடம் நீ ஏமாறப்பார்க்கிறாயா?ஏய் லூசு"...என்று வந்தனா சொல்வதை போல் ஒரு பிரமை...இதயம் சுக்குநூறாய் உடைந்து தெறித்ததை போல் உணர்ந்தவள் அதே வேகத்தில் கண்களை திறந்து பார்த்தாள்.....அந்நேரம் இருவரும் சென்னையை அடைந்திருந்தனர்...!



தொடரும்..........!!!!

எழுதியவர் : ப்ரியா (5-Feb-16, 11:36 am)
பார்வை : 365

மேலே