நவீன பொம்மைகள் நாம்

பொம்மைகளாக

அனுப்பிக் கொண்டிருந்தோம்...

கண்ணாடிக்காரனை

அடிக்கடி அனுப்பினேன்...

பெருக்கல் கை கொண்டவளை

அதிகமாக அனுப்பினாய்...

கிடார்க்காரனை கவிதை

வாசிக்க அனுப்பினேன்...

இடுப்பில் கை வைத்து பார்ப்பவளை

நீ அனுப்பினாய்...

யோசனைக்காரனை

இருமுறை அனுப்பினேன்...

எட்டி எட்டி குதிப்பவளை

சற்று நேரத்துக்கு பின்

அனுப்பினாய்...

குழப்பக்காரனை உடனே

அனுப்பினேன்...

ஜோடிக்காரனை அனுப்பிவிட்டு

பின்னாலேயே தூங்குபவனை

அனுப்பினாய்...

புரிந்தும் புரியாமல்

காத்திருப்பவனை அனுப்பினேன்...

பதில் இல்லை...

நேரம் ஆக ஆக

மனதுக்குள் பொம்மைகளின்

அழுகைக்காரன் எட்டிப் பார்த்தான்...

சரி ஆனது ஆகட்டும் என

சைக்கிள்காரனோடு பின்னால் அமர்ந்து

இப்போது உன் வீட்டை

சுற்றிக் கொண்டிருக்கிறேன்....

குறைந்த பட்சம்

ஜன்னல் எட்டிப் பார்க்கும்

பொம்மையாவது நீ செய்வாயா என்று...!

- கவிஜி

எழுதியவர் : கவிஜி (9-Feb-16, 5:55 pm)
பார்வை : 75

மேலே