தென்றலில் ஒரு தேவதை நடந்து வந்தாள்

தென்றலில் ஒரு தேவதை நடந்து வந்தாள்
அவள் கண்களில் மூடித் திறந்தது ஒரு கவிதை புத்தகம்

அந்தியில் சாயும் அந்த ஆதவனும்
அவள் அழகினை பார்த்து சற்று தயங்கி நின்றான்

அவள் பூவிதழில் விரியும் மௌனப் புன்னகையில்
பூஞ் சோலைகள் பூப்பதை மறந்து நின்றன

நெஞ்சினில் அவள் வீசிடும் காதல் வலையில்
நினைவுகளெல்லாம் சிக்கித் தவிக்கிறது

வானில் வீசிடும் அந்தி நிலவும்
வஞ்சியின் மோக வலையில் அதிசயித்து நிற்கிறாள்

இவள் மெல்லப் பேசிடும் தமிழினில்
கவிதைகளும் நாணி வேறு பக்கம் சென்றிடும்

இவள் சொல்லிலும் அழகிலும்
குழலும் யாழும் இசையினை மறந்திடும்

தென்றலில் இந்தத் தேவதை நடந்து வந்ததால்
காவிய வரிகள் இவளிடம் காதல் கொள்ளும் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (9-Feb-16, 6:22 pm)
பார்வை : 141

மேலே