காதலெனும்
காதலெனும் ....
புன்னகயை பரிமாறினாய்
என்னிடம் பேசும் உரிமை எடுத்க்கொண்டாய்
என் உறவுகள் பட்டியலில் உன்னை இணைத்துக்கொண்டாய்
என் அந்தரங்கத்தில் இடம் பிடித்தாய்
என் தனிமையை களவாடினாய்
அங்கங்கள் ரசித்து என் உடலின் சுகம் பருகினாய்
கலவி முடிந்து காலம் கடந்தது..
என் சுதந்திரத்தை பறித்துக்கொண்டாய்
உன் காமமும் குரோதமும்
என் கழுத்தை நெரிக்கின்றன
உன் அகங்காரம்
என் மூச்சுக்குழலை அரித்துக்கொண்டிருக்கிறது
என் மௌனத்தையும் வலியாக்கி
வார்த்தை வாள் வீசுகிறாய்
நான் சாதாரணமாக பேசுவதை
என்னை அவமானப்படுத்துவதற்கான
ஆயுதமாக பயன்படுத்துகிறாய்
அன்பை சுமந்த என் இதயத்தில்
அவமானங்கள் நிரம்பி வழிகின்றன
அனைத்தையும் நீ
காதலென்னும் போர்வையிலேயே
செய்துகொண்டிருக்கிறாய்