ஜெல்லி மீன்கள்

.

எங்கிருந்து வந்தது இவருக்கு
சிங்கம் போல் இத்தனை துணிச்சல்
அரசு ஊழியராய் இருந்து கொண்டு
எல்லோரையும் சகட்டு மேனிக்கு
உரசிப் பார்க்கிறார் -என்றேனும்
மாசில் வீணையையும்
மாலை மதியத்தையும் ரசித்ததுண்டா;
வாசிக்கக் கொடுத்த ‘காம்ரேடின்’
வாழ்க்கைச் சரிதத்தை ருசித்ததுண்டா;
மயிரில்லா கழுத்து கொண்ட கோழியாக
காணி நிலம் இல்லாத இவர்
இறுதி வரை போராடுவோம் என கொக்கரிக்கிறார்
வேலை நிறுத்தம்என அறிவிக்கப்பட்ட அன்று
போராட்டம் ஓங்குக என்று கும்பலில்
கோயிந்தா போட்டு விட்டு
ஒன்றுமே நடவாதது போல் நழுவி
குனிந்த தலை நிமிராமல்
தனது இருக்கையி்ல் பணியில் இருக்கின்றார்..

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (10-Feb-16, 3:36 pm)
Tanglish : jelli meenkal
பார்வை : 65

மேலே