செங்காத்து பூமியில் பேசும் வண்ணமலர் 555

என்னவளே...

நீ பட்டு பாவாடை உடுத்தி
வண்ணத்திற்கேற்ற தாவணி உடுத்தி...

உன் குறுக்குவரை
கூந்தலினை பின்னி...

கூந்தல் முழுவதும்
மல்லிகைப் பூச்சூடி...

செங்காத்து வீசும்வேலை
சோளைக்காட்டிற்கு ஓடிவந்தாய்...

ஓடிவந்தவள் மழலையைபோல்
சோளைப்பூவை கொஞ்சினாய்...

உன்னைச்சுற்றி மலர்ந்திருக்கும்
வண்ணமலர்களை கண்டாயா...

உன்னை தலைஉயர்த்தி
பார்க்கிறது தேவதையென்று...

ஓடிவந்தவள் தனியாக
ஓடிவந்தாயா...

என் மனதையும் ஏனடி
இழுத்து ஓடிவந்தாய்...


உன் பாதம்பட்ட புல்வெளியில்கூட
உன் பாதசுவடுகள் இல்லை...

அவ்வளவு மென்மையானதா
உன் பாதசுவடுகள்...

என் உள்ளத்தில் மட்டும்
ஏனடி வைத்தாய்...

ஆழமான உன்
பாதசுவடுகளை...

செங்காத்து பூமியில் பரிசளிக்க
என்னிடம் ரோஜாமலரில்லை...

இதோ உன்னைசுற்றி பூத்திருக்கும்
வண்ணமலர்கள் உனக்காக...

கொஞ்சம் என்னுடன் வாடி
உட்காந்து பேசுவோம் சோளக்காட்டில்...

என் பிரியமானவளே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Feb-16, 8:32 pm)
பார்வை : 82

மேலே