வாயும் வயிறும்
வாய்விட்டுப் பேசா வதையை வளர்க்கின்ற
நாய்க்கிடும் முத்தத் தினால்நாசூக் – காய்காட்டும்
உள்ளத் துயரம் உணர்த்துகின்ற சித்திரம்
விள்ளல் எரியும் வயிறு.
வாய்விட்டுப் பேச வளர்ந்திட்ட சந்தேகப்
பேய்விட்டு ஓடும். பிரிவென்னும் – நோய்கண்ட
நெஞ்சத்துள் நேசத்தை வைக்க சதிபதிக்கு
வஞ்சமற்று வீங்கும் வயிறு.
*மெய்யன் நடராஜ்