திருப்பூவணம் பதிகம் 6

"வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய
பொறியர வணிபொழிற் பூவ ணத்துறை
கிறிபடு முடையினன் கேடில் கொள்கையன்
நறுமல ரடிதொழ நன்மை யாகுமே" 6

பதவுரை:

வெறி கமழ் புன்னை - மிகுந்த நறுமணம் கமழும் புன்னை மரங்கள்,
பொன்ஞாழல் - பொன்னிறமான குங்குமப்பூ மரங்கள்,
விம்மிய பொறி அரவு - பருத்த நாகப் பாம்பு,
கிறிபடும் உடையினன் - பரிகசிக்கத்தகுந்த பித்தனைப்போல கிழிந்த ஆடை தரித்தவன்.

பொருளுரை:

மிகுந்த நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த புன்னை மரங்களும், பொன்னிறமான குங்குமப்பூ மரங்களும் நிறைந்த, பருத்த நாகப் பாம்பை தலையில் அணிந்து, அழகிய சோலைகளை உடைய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவன். பரிகசிக்கத்தகுந்த பித்தனைப்போல கிழிந்த ஆடை தரித்தவன். யார்க்கும் தீமைகள் செய்யாத கொள்கைகளை உடையவன்.

இத்தகைய தன்மைகளையுடைய சிவபெருமானின் நறுமணமிக்க மலர் போன்ற திருவடிகளைத் தொழும் அன்பர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Feb-16, 11:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 82

மேலே