காதல் அழிவதில்லை

பலவித காதல் உண்டு இப்பூவுலகில்,
பார்த்தவுடன் காதல்,
பார்வையில் மட்டுமே காதல்,
பாசம் நிறைந்த காதல்,
பகிர தெரியா காதல்,
பதறி தவிக்கும் காதல்,
பண ஆசையற்ற காதல்,
பார்த்திடாத காதல்,
பார்த்தும் பேசிடாத காதல்,
பல காலம் காத்திருக்கும் காதல்,

காதல் பலவகை படலாம் - அனால்
காதல் அது என்ன என்று அறியாது,
கண்ட ஈர்ப்பினால் காதல் என்று மட்டும் பெயர் சூடாதே,
களங்கமாகும் தூய்மையான காதல் !!!
காதல் செய்,
காலம் முழுதும்,
காத்திருந்தாலும் உள்ளுறும் மகிழ்ச்சி,
காதலனை எண்ணி கவலை இல்லை,
கைப்பிடிப்பான் காதல் வெற்றி சிறத்து !!!
காதல் என்றும் அழிவதில்லை,
காதலின் பொருள் அறியாது,
காதல் என்று சொல்லி திரிந்து - சிறு
கசப்பு வந்தாலும்,
கைபிரிரிந்து சென்று விடும் நீங்கள் பெரும் தோல்வியின் பெயரை,
கனவின் பல வண்ண,
கவிமழை சாரலாய்,
கண்ணோடும் நெஞ்சோடு வாழும் காதலுக்கு சூடாதே,
காதல் அது என்று அழிவதில்லை !!!!

எழுதியவர் : ச.அருள் (14-Feb-16, 9:12 am)
பார்வை : 480

மேலே